கொய்யாக் கன்றுகள் விற்பனை

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை மற்றும் மருங்குளம் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் கொய்யாக் கன்றுகள் தலா ரூ. 12 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் எம். செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  •  தமிழ்நாட்டில் சுமார் 8,500 ஹெக்டேரில் கொய்யா பயிரிடப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 160 ஹெக்டேரில் இது சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
  • அங்காபாத், லக்னோ-49, லக்னோ-46 ரக கொய்யா நல்ல மகசூல் தரவல்லது. இதை ஐந்துக்கு, ஆறு மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.
  •  45-க்கு 45 என்ற அளவில் குழிவெட்டி அதில் தொழுஉரம் 10 கிலோ, வேப்பம் புண்ணாக்கு ஒரு கிலோ, மேல் மண் இட்டு, குழியில் லிண்டேன் 1.3 சதத் தூள் விட்டு நடவு செய்ய வேண்டும். நட்ட அன்றும், பின்னர் மூன்று நாள்கள் கழித்தும் தண்ணீர் பாய்ச்சுதல் அவசியம். பின்னர், 10 நாள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
  •  நடவு செய்யப்பட்ட கொய்யாப் பயிர்கள் இரண்டரை ஆண்டுகள் முதல் பலன் கொடுக்க ஆரம்பிக்கும்.
  • நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டத்தில் இருந்து ஒரு ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 20 டன்கள் வரை மகசூல் பெறலாம்.
  •  கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவில் உள்ளது. எனவே, இதற்கு சந்தை வாய்ப்பு அதிகம் இருப்பதால், விவசாயிகள் இதை சாகுபடி செய்து பயன்பெறலாம்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “கொய்யாக் கன்றுகள் விற்பனை

  1. bala says:

    கொய்யா பயிரிட வேண்டாம்

    நான் இரண்டு ஏக்கர் கொய்யா மரங்கள் வைத்திருந்தேன் இயற்கை முறையிலே பராமரித்து வந்தேன்.
    மாவுபூச்சி தாக்குதல்,
    வறட்சி தாங்காமல் கருகுதல்,
    குறைந்த விலை,
    சீக்கிரம் அழுகுதல்,
    காய்களில் கரும்புள்ளி
    என ஏகபட்ட பிரச்சனைகள்.அதனால் 1.5 ஏக்கரில் உள்ள மரத்தை அழித்து அதில் ரெட்லேடி பப்பாளி நடவு செய்தேன்.இப்போது பழம் அறுவடை நடக்கிறது அதிக லாபம் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *