கொய்யாவில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ மேலாண்மை

கொய்யாத்தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈயினை கட்டுப்படுத்தும் முறையினை லூதியானாவில் (பஞ்சாப் மாநிலம்) உள்ள மத்திய அறுவடைக்குப்பின் தொடர்பான பொறியியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் (CIPHET) அறிமுக படுத்தி உள்ளது.

  • எத்தனால் 6 பங்கு, மெத்தில் யூஜெனால் 4 பங்கு மற்றும் 1 பங்கு மேலத்தியான் (ethanol, methyl eugenol and malathion (6:4:1))கலந்த இனக்கவர்ச்சி திரவக்கரைசல் தயாரிக்கப்பட்டது.
  • தண்ணீர் உறிஞ்சக்கூடிய 2″ X 2″ பிளைவுட் துண்டுகளை இக்கரைசலில் ஊறவைத்து, ஒரு பிளாஸ்டிக் ஜாடியில் பொருத்தப்பட்டது (படம் 1).
  • இந்த பிளாஸ்டிக் ஜாடிகளின் மேற்புறத்தில் எதிர் எதிர் திசையில் 1.5 செ.மீ விட்டமுள்ள ஓட்டைகள் போடப்பட்டது.
  • இந்தப்பொறி ஒரு ஏக்கர் கொய்யாப்பழத்தோப்புக்கு ஒன்று வீதம் பொருத்தப்பட்டது.
  • இவ்வாறு பொருத்தப்பட்டவுடன், முந்தைய அறுவடையின் போது 50-60 சதவிகிதமாக இருந்த பழ ஈக்களின் தாக்குதல், அடுத்த அறுவடையின் போது 10 சதவிகிதம் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • மேலும் பழ ஈக்களின் தாக்குதலை தடுக்க, விவசாயிகள் உபயோகிக்கும் பூச்சிக்கொல்லிகளின் அளவும் 80-90 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது.
  • முயற்சி மற்றும் இந்த இனக்கவர்ச்சி பொறியின் செயல்படும் திறத்தினால், தற்பொழுது அபோகார் பகுதியில் 1500 ஹெக்டேர் நிலப்பரப்பில் இப்பொறியினை பயன்படுத்தப்படுகிறது.
  • இவ் இனக்கவர்ச்சி பொறி கொய்யாப்பழத்தோட்டங்களில் பழ ஈயினைக் கட்டுப்படுத்த ஒரு வரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • பழ ஈக்களுக்கான இனக்கவர்ச்சி பொறி (பி.சோனாட்டா மற்றும் பி.கரக்ட்டா)
fruit fly
பி.சோனாட்டா
zonata
பி.கரக்ட்டா
correcta

ஆதாரம் : INDG இணையத்தளம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

பூச்சிகளை அழிக்கும் ‘கவர்ச்சி பொறிகள்’... பூச்சிகள் அதன் சுற்றுச் சூழலில் ஏற்படும் வெளிச்சம்...
பூச்சிகளை அழிக்கும் சோலார் விளக்குப் பொறி!... கெடுதல் செய்யும் பூச்சிகளை அழிக்க உதவும் சோலார் வி...
இனக்கவர்ச்சி பொறி மூலம் பூச்சி கட்டுப்பாடு... இனக்கவர்ச்சி பொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச் ச...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *