சப்போட்டா சாகுபடி செய்வது எப்படி?

மண்:

  • சப்போட்டா பயிர் எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது.
  • நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது.
  • ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது.

பருவம்:

ஜூலை – ஆகஸ்ட்.

ரகங்கள்:

கிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி, கீர்த்தபர்த்தி, பாலா, காளிப்பட்டி, கோ-1, கோ-2, பெரியகுளம் 1, 2, 3.
பயிர் பெருக்கம்: ஒட்டுக்கட்டிய செடிகள்
பின்செய் நேர்த்தி:

  • ஒட்டுப் பகுதிகளின் கீழே தழைத்துவரும் வேர்ச்செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்ற வேண்டும்.
  • தரை மட்டத்தில் இருந்து சுமார் 2 அடி உயரம் வரை கிளைகள் எதுவும் பிரியாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
  • கிளைகள் மரத்தில் சீராகப் பரவி இருக்க வேண்டும்.
  • சப்போட்டா மரத்திற்கு கவாத்து செய்தல் தேவை இல்லை.
  • உயரமாக வளரக்கூடிய ஒரு சில தண்டுகளை மட்டும் நீக்கிவிட வேண்டும்.
  • அடர்த்தியான, நிழல் விழும் கிளைகளையும் நீக்கிவிடவும்.

ஊடுபயிர்:

  • ஆரம்ப வருடங்களில் மர வரிசைகளுக்கு நடுவே காய்கறிப் பயிர்களையும், குறுகிய காலப் பழப்பயிர்களான பப்பாளி போன்றவற்றையும் சாகுபடி செய்வதன் மூலம் வருமானத்தைப் பெருக்கலாம்.


அறுவடை மற்றும் மகசூல்:

  • சப்போட்டா பயிர் வருடத்திற்கு இரண்டு முறை பெரும்பான்மையாக காய்க்கும்.
  • ஏப்ரல் முதல் ஜூலை வரை ஒரு முறையும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஓரளவு காய்க்கும்.
  • இந்தப் பயிரின் பழ முதிர்ச்சியை அறிவது சிறிது கடினம். இதர பயிர்களைப் போல் இதில் நிறமாற்றம் ஏற்படுவதில்லை.
  • ஆயினும் பழத்தின் தோலில் உள்ள சிறிய சிறிய கருநிறத்துகள்கள் மறைந்து, பழங்கள் சிறிது பளபளவென்றிருக்கும்.
  • பழத்தை நகத்தால் கீறிப்பார்த்தால், உள்ளே மித மஞ்சள் நிறம் தெரிய வேண்டும். பால் வடியக் கூடாது. பழத்தின் அடிப்பாகத்தில் உள்ள முள் போன்ற சிறிய நுனி, எளிதில் பிரிந்துவரும். பழத்தோலில் சொரசொரப்பு மாறி மிருதுவாகும்.
  • ஒரு எக்டருக்கு 20 முதல் 25 டன்கள் மகசூலாகக் கிடைக்கும்.

தொடர்புக்கு: எம்.அகமதுகபீர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லிஸ் நகர் போஸ்ட், தாராபுரம்-638 657.
எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர்,
அக்ரி கிளினிக், தாராபுரம். அலைபேசி எண்: 09360748542.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *