சம்பங்கி சாகுபடி

சம்பங்கி  ரகம் – கிழக்கு வீரிய ரகம்.பயிரிடும் நிலத்தின் அளவு – தோராயமாக 30 சென்ட்.

உழவு முறை

  • வாரம் ஒரு உழவு போட்டு 15 நாட்களுக்கு நிலத்தை ஆறவைக்க, மீண்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை விதமாக 2 உழவு போடவேண்டும்.
  • நன்கு ஆறிய பின் 8 யூனிட் அளவு (4 டிராக்டர்) நன்கு மக்கிய சாணமாக இடவேண்டும். இதை 15 நாட்களுக்கு ஆறவிட வேண்டும்.
  • பின் அதை நிலத்தில் நன்கு இறைத்துவிட வேண்டும். இறைத்த பின் ஒரு உழவு விட்டுவிட வேண்டும்.
  • கிழங்கின் அளவு 30 சென்ட், 10 மூடை.

விதை நேர்த்தி:

  • கிழங்கு வாங்கிக்கொண்டு வந்து வேப்பமரத்தின் நிழலில் உலரவைக்க வேண்டும்.
  • உலரவைத்த கிழங்கை 3 நாட்களுக்கு 3 முறையாக கை பார்க்க வேண்டும்.
  • அவ்வாறு செய்தால் அருகம்புல் வேர் கோரைக்கிழங்கு மற்ற களைகள் அந்த கிழங்கிலிருந்து முற்றிலும் அகற்றப்படும்.

பார் அமைக்கும் முறை:

  • சிறிய சிறிய வாய்க்கால்கள் எடுத்து கால் அடி வீதத்தில் மூன்று எட்டுக்கு ஒரு நிறை வீதமாக மூன்று பாத்திகளாக அமைக்க வேண்டும்.
  • ராஜா வாய்க்கால் கரை 2 அடியில் அமைக்க வேண்டும்.
  • பாத்தி அரை அடிக்கு ஒரு கரை வீதமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

கிழங்கு நடவுமுறை:

  • ஒரு அடிக்கு ஒரு இடத்தில் மூன்று, நான்கு கிழங்கை அடிப்பாகம் பூமிக்குள்ளும் மேல்பாகம் பூமிக்கு மேல்நோக்கி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

நீர்ப்பாசனம்:

  • கிழங்கு நட்ட பிறகு உடனே நீர் பாய்ச்ச வேண்டும்.
  • மண்ணின் தன்மையை பொறுத்து கரிசல் மண்ணாக இருந்தால் 5 நாட்களுக்கு ஒரு முறையும் செவல் மண்ணாக இருந்தால் 3 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நான்காவது முறை தண்ணீர் பாய்ச்சியபிறகு களை தோன்ற ஆரம்பிக்கும்.

களை நிர்வாகம்:

  • சூழ்நிலைக்கேற்றவாறு 10-15 நாட்களுக்கு ஒரு களை எடுக்க வேண்டும்.
  • 30-40 நாட்களில் கிழங்கு முளைப்புத்திறன் வந்துவிடும். களைகள் வந்து கிழங்கினை பாதிக்காதவாறு களைகளை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வளர்ப்பு முறை:

  • நட்ட 60 நாட்களில் 5-10 செ.மீ. வரை கிழங்கு வளர்ந்துவிடும். நன்கு வளர்ந்தபின் 10-15 செ.மீ. வந்தபின் இயற்கை வேளாண்மை உரம் இடவேண்டும்.

மேலுரம்:

  • இயற்கை வேளாண்மை உரத்தை 30 சென்டுக்கு 1 மூடை வீதமாக எடுத்து ஒரு டிரம்மில் போட்டு தண்ணீர் கலக்கி, நீர் பாய்ச்சும்போது ஊற்ற வேண்டும்.
  • இவ்வாறு செய்தால் செடி நன்றாக வளர்ந்து கரும்பச்சை நிறத்தில் இருக்கும். பரவலாக அரும்புகள் தோன்றி பூக்கள் வர ஆரம்பிக்கும்.
  • இவ்வாறு நடவு செய்து களை இல்லாமல் இருக்கும் நிலத்திற்கு நோய் தாக்கும் அபாயம் இல்லை.

பயிர் பாதுகாப்பு முறை:

  • 30 நாட்களுக்கு ஒரு முறை 3 லிட்டர் மாட்டு கோமியம், அரைலிட்டர் ஆறியவடிகஞ்சி, பால் 300 மில்லி, மஞ்சள்தூள்-300 கிராம் கலந்து பவர் ஸ்பிரேயர் மூலம் தெளிக்க வேண்டும்.
  • இயற்கை உரத்தை பயன்படுத்த இயற்கை முறையில் சாகுபடி செய்தோமானால் பூ நன்றாகவும் பருமனாகவும் இருக்கும். நல்ல மகசூல் கிடைக்கும். நல்ல விலையும் கிடைக்கும்.

அறுவடை: எல்லா மாதங்களிலும் வரும்.
வாழ்நாள்: 5, 6 வருடம் வரை இருக்கும்.
தொடர்புக்கு: சவடமுத்து, அலவாச்சிபட்டி, திண்டுக்கல். அலைபேசி எண்:
09843632040
-கே.சத்தியபிரபா, உடுமலை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “சம்பங்கி சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *