சிறுதானிய பயிர் மானாவாரியாக பயிர் செய்தால் லாபம்

சிறுதானியங்கள் மானாவரியாக பயிர் செய்தால் விவசாயிகள் அதிக வருமானம் சம்பாதிக்கலாம். நீர் மேலாண்மை பயிற்சி நிலைய, வேளாண் துணை இயக்குநர் இந்திராகாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், மாவட்டங்களில் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளாகவும், வறட்சி தாங்கி, எல்லா விதமான மண்ணிலும், வளரும் பயிராக சிறுதானியங்கள் உள்ளந. குறிப்பாக கம்பு, சோளம், குதிரைவாலி, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களை லேசான மழை பெய்யும் சமயத்தில் உழவு செய்த பிறகு, தொழு உரங்கள் லேசாக இட்டு, சிறுதானிய விதைகளை போட்டால் போதும், லேசான மழை இரண்டு முறை பெய்தால் சிறுதானியங்கள் நன்றாக வளர்ந்து விடும்.

அதே சமயத்தில் தமிழ் மாதங்கள் சித்திரை, ஆடி, மார்கழி பட்டங்களில், மானாவரியாக சிறுதானியங்கள் பயிர் செய்தால் நன்றாக வளர்ந்து விளைச்சல் தந்து விடும், அதிக லாபம் தரும் இந்த சிறுதானியங்கள் சத்தானதகவும், சுவையானதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தாகவும், சர்க்கரை நோயாளிகள் அதிகம் விரும்பி உண்ணும் உணவாகவும், விரைவாக செரிமானம் செய்யும் உணவாக சிறுதானியங்கள் உள்ளன.

வறட்சியை தாங்கி அதிக மகசூல் தரும் சிறுதானியங்கள் பயிர் செய்தால், விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக சிறுதானியங்கள் விளங்குகின்றன’ என்றார்.

நன்றி: தினகரன்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

தினை பயிரில் திருப்தியான லாபம்!... தினை போட்டால் திருப்தியான லாபம் பெறலாம் எனக்கூறும்...
பல தட்பவெப்ப நிலைகளில் வளரக்கூடிய குதிரைவாலி பயிர்...  வறட்சிக்கு உள்ளாகும் விளை நிலங்கள்,வெளóள...
கம்பு பயிரில் உர நிர்வாகம் நாற்றங்கால்தொழு உர பயன்பாடு750 கிலோ தொழுஉர...
சிறுதானியங்களின் மகத்துவம்! நெல், கோதுமை போன்ற பெருதானியங்களால் விவசாயிகளுக்கு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *