பல தட்பவெப்ப நிலைகளில் வளரக்கூடிய குதிரைவாலி பயிர்

 

வறட்சிக்கு உள்ளாகும் விளை நிலங்கள்,வெளóளப் பெருக்கு நிறைந்த வளம் குறைந்த நிலங்கள் மற்றும் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் பயிராகி நிறைவான மகசூல் தரக்கூடிய முக்கிய சிறுதானியம் குதிரைவாலியாகும்.
குதிரைவாலி தானியமாகவும்,கால்நடைகளுக்கு தீவனப்பயிராகவும் பயனளிக்கிறது.  தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள்  குதிரைவாலியைப் பயிரிட்டு பயன் பெறலாம் என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.

சிறுதானியங்களின் ஊட்டச்சத்து:

பொதுவாக அரிசி, கோதுமையைவிட சிறுதானியங்களில் அதிகளவு ஊட்டச்சத்து இருப்பதாக அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்களில் புரதம்,நார்ச்சத்து, நியாசின் தலாமின் மற்றும் ரிபோபிளேவின் ஆகிய வைட்டமின்களும், இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துகளும் அதிகளவில் உள்ளன. சிறுதானியங்களில் அதிகளவு இரும்புச்சத்து அதாவது 100 கிராமில் 18.60 மில்லி கிராமும், நார்ச்சத்து 100 கிராமில் 13.6 கிராம் என்ற அளவிலும் சத்துகள் உள்ளன.

உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு:

உடலுக்கு வலிமை சேர்க்கிறது. ரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் வராமல் இருக்க உதவுகிறது.

உடல் பருமன் கொண்டவர்களின் உடல் எடை சீராகக் குறைகிறது. இதை உணவில் அதிகளவில் சோóப்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், எலும்பு வளர்ச்சிக்கும் உதவும்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

பருவம் மற்றும் ரகங்கள்:

குதிரைவாலி தானியத்தை 300 மி.மீ முதல் 350 மிமீ வரை மழை பொழியும் இடங்களில்கூட வளரக்கூடிய மானாவாரி பயிராக ஆடி (ஜுலை – ஆகஸ்ட்) மற்றும் புரட்டாசி (செப். -அக்.) பட்டங்களில் பயிரிடலாம். அதிக விளைச்சல் தரக்கூடிய  கோ-1, கோ-2 ஆகிய ரகங்களைப் பயன்படுத்தலாம். 110 நாள் வயதுடைய குதிரைவாலி பயிர் ஒரு ஹெக்டேருக்கு 1 டன் முதல் 2 டன் வரை மகசூல் தரவல்லது.

நிலம் தயார் செய்தல்:

நிலத்தை மூன்று முறை நன்றாகப் புழுதி உழவு செய்து களைகள் இல்லாதவாறு பண்படுத்த வேண்டும். நிலத்தை சமன் செய்து 3 மீ-க்கு 3மீ அளவுள்ள பாத்தி அமைக்க வேண்டும்.
விதையளவு: வரிசை விதைப்புக்கு ஹெக்டேருக்கு 10 கிலோவும், தூவுவதற்கு 12.5 கிலோவும் விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ. செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளிவிட்டு விதைக்க வேண்டும்.

விதை நேர்த்தி:

விதை மற்றும் மண்ணின் மூலமாக பரவும் நோய்களின் தாக்குதலைத் தடுக்கவும் தாக்குதலைக் குறைக்கவும் விதைநோóத்தி செய்வது அவசியம். டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோவுக்கு 4 கிராம் அல்லது சூடோமோனஸ் ஒரு கிலோவுக்கு 10 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
உயிர் உர நேர்த்தி விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஹெக்டேருக்கு தேவையான விதைகளை தலா 3 பாக்கெட் அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்கவும்.

உரமிடுதல்:

ஒரு ஹெக்டேர்  நிலத்தில் அடியுரமாக 5-10 டன்கள் மக்கிய தொழு உரத்தைக் கடைசி உழவின்போது இட்டு உழ வேண்டும். பின்னர் 20 கிலோ தழை மற்றும் 20 கிலோ மணிச்சத்தை அடியுரமாக விதைப்பின்போது இட வேண்டும். பின்னர் தரமுள்ள 20 கிலோ மணிச்சத்து மற்றும் 20 கிலோ தழைச்சத்தை 20-25 நாட்களுக்குள் மழை பெய்யும்போது மண்ணில் ஈரம் இருக்கும்போது மீண்டும் இட வேண்டும்.

களைக்கட்டுப்பாடு:  

  • விதைத்த 18-ம் நாள் ஒரு களையும்,45-ம் நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும்.
  • பயிர் களைதல்: முதல் களை எடுத்தவுடன் 2 அல்லது 3 நாள்கள் ஊடு உழவு செய்து பயிர்களைக் களைந்து தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.
  • பயிர் பாதுகாப்பைப் பொறுத்தவரை பொதுவாக பூச்சிகள் அதிகளவில் தாக்குவதில்லை. மேலும் கரிப்பூட்டை நோயைத் தடுக்க எதிர் உயிரிகளான சூடோமோனஸ், டிரைகோடொமோவிரிடி போன்றவற்றைப் பயன்படுத்தி பூஞ்சானக் கொல்லி விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

அறுவடை :

  • கதிர்கள் நன்கு முற்றிய பிறகு அறுவடை செய்து களத்தில் காயவைத்து பின் தானியங்களைப் பிரித்தல் வேண்டும்.
  • பின் காற்றில் தூற்றி தானியங்களைத் தூசி நீக்கி சுத்தம் செய்ய வேண்டும்.
  • ஒரு ஹெக்டேரில் ஏறத்தாழ 1 டன் முதல் 2.5 டன் வரை மகசூல் கிடைக்கும்.
  • 4 முதல் 5 டன் தீவன மகசூல் கிடைக்கும். குதிரைவாலி மற்றும் சிறுதானியங்களில் இருந்து அரிசியைப் பிரித்தெடுக்கத் தேவையான இயந்திரங்கள் தற்போது உள்ளது. இதன் மூலம் குதிரைவாலி அரிசியை தயாரித்துச் சந்தைப்படுத்தலாம்.

இவ்வகை தானியங்களில் ஊட்டச்சத்துகள் அதிகளவில் உள்ளதால் தற்போது சிறு மற்றும் குறு தானியங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குதிரைவாலி அரிசி மூலம் குதிரைவாலி பிரியாணி,பொங்கல், பாயாசம், சர்க்கரைப் பொங்கல், புட்டு போன்ற உணவுகளைத் தயாரிக்கலாம் எனவே விவசாயிகள் குதிரைவாலி சாகுபடியை மேற்கொண்டு நல்ல லாபம் பெறலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *