சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க யோசனை

சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்ப முறைகள:

 •   60- 90 நாள்கள் வயதுடைய சூரியகாந்தி வறட்சியைத் தாங்கி வளரும்.
 •  பொதுவாக சூரியகாந்தியில் மகசூல் குறைவுக்கு பிரதான காரணம் மகரந்தச் சேர்க்கை உண்டாகாமல் இருப்பதுதான்.
 • எனவே, புதிய உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, மகரந்தச் சேர்க்கையை அதிகரித்து அதிக மகசூல் பெறலாம்.
 • சூரிய வெளிச்சம் இருக்கும் போது காலை 6.30- 7.30 மணிக்கு தொடங்கி 9.30- 11 மணிவரை தொடர்ந்து மகரந்தத் தூள் வெளி வரும்.
 • குறைந்த வயதுடைய உயர் ரகங்களைத் தேர்வு செய்து தகுந்த பருவத்தில் விதைக்க வேண்டும்.
 • அதாவது, பூ பூக்கும் காலம் மழை இல்லாத காலமாக இருக்க வேண்டும்.
 • சூரியகாந்தி பயிரிடும் இடத்தில் ஏக்கருக்கு 2 தேன் கூடுகளை அமைத்து, தேனீக்கள் மூலம் அயல் மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்திட வேண்டும்.
 •  கையினால் மகரந்தச் சேர்க்கை என்ற முறையில் செய்து மகரந்தச் சேர்க்கையை அதிகரிக்கலாம்.
 • வேலை ஆள்களின் கைகளில் மெல்லிய சுத்தமான வெள்ளைத் துணியைச் சுற்றி, பூவின் மேல்பாகத்தை மெதுவாக ஒற்றிவிடச் செய்ய வேண்டும்.
 •  செடிகளில் பூ பூத்தபின் 2 செடிகளின் பூத்தட்டுகளைப் பற்றி, முகத்தோடு முகம் ஒட்டுவது போல 2 பூத்தட்டுகளையும் பற்றி மெதுவாக ஒன்றுடன் ஒன்று படுமாறு இணைக்க வேண்டும்.
 • போராக்ஸ் என்ற நுண்ணூட்டத்தை பூக்களில் தெளிப்பதால் விதை உற்பத்தி அதிகரிக்கலாம்.
 • இவ்வாறு  சூரியகாந்தி பயிர் செய்துள்ள விவசாயிகள் விதை உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து, அதிக மகசூல் பெற்றுப் பயனடையலாம்.

இவ்வாறு பெரம்பலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் எம். செந்தமிழ்ச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளார.

நன்றி: தினமணி

Related Posts

தைப் பட்ட சூரியகாந்தி ஆண்டு முழுவதும் சூரியகாந்தி சாகுபடி செய்ய உக...
சூரியகாந்தி அறுவடை அட்வைஸ் சூரியகாந்தி விவசாயிகள், அறுவடைக்குப் பிறகு சூரியகா...
சூரியகாந்தியில் பச்சைக் காய்ப் புழு... சூரியகாந்தியில் பச்சைக் காய் புழுவின் தாக்குதலை கட...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *