வெண்மை புரட்சி தந்தை குரியன் மறைந்தார்

பசுமை தமிழகம் வெண்மை புரட்சியின் வித்தகரான டாக்டர் குரியனுக்கு தன்னுடைய மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறது
கேரளத்தில் பிறந்து, குஜராத்தில் தன முழு வாழ்கையும் பால் பண்ணை, மாடுகள் வைத்து இருந்த சிறு விவசாயிகளுக்க அர்ப்பணித்து கொண்டார்.
சென்னையில் கிண்டி பொறியியற் கல்லூரியில் படித்த பின் குஜராத் சென்றவர், அங்கேயே தங்கி விட்டார்.
அமுல் என்ற ஒரு நிறுவனத்தை ஆனந்த் என்ற சிறு ஊரில் ஆரம்பித்து, 14000 கோடி வரை வியாபாரம் செய்ய வைத்தார். கூட்டுறவு மூலம் சிறு விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் இருந்து வர செய்தார்.

இன்று கிராமப்புற குஜராத் செழிக்கிறது என்றால் அவரே காரணம்.

அமுலின் மிக பெரிய பலம் அவரால் உண்டாக பட்ட கூட்டுறவு மாடல் தான். நேரடியாக விவசாயிகள் தன்னுடைய வரவு செலவுகளை பார்த்து, பாலை நல்ல விலைக்கு விற்க முடிந்தது

1946 வருடம் அமுல் ஆரம்பிக்க பட்டது முதல் அவரின்
சாதனைகள் ஏராளம். பால் உற்பத்தியில் இன்று இந்தியா உலகத்திலேயே இரண்டாவது இடத்தை கொண்டுள்ளது.

ஒன்றரை கோடி உறுபினர்கள் ஒன்றரை லட்சம் கூட்டுறவு
நிறுவனங்கள் மூலம் இந்திய பாலின் தனிறைவு அடைந்தது மட்டும் இல்லாமல், சிறு விவசாயிகள் நேரடியாக பலன் பெற்றது அவரின் மிக பெரிய சாதனை

தமிழ் நாட்டின் ஆவின் நிறுவனத்தின் தந்தையும் அவரே.

கண்ட அரசியல் எருமைகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும்  பாரத ரத்னா கொடுத்தார்கள் மதிய அரசு. ஒன்றரை கோடி
மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைத்த இவருக்கு அரசியல் தலைவர்கள் கொடுக்க மனம் வர வில்லை!

இதோ, அவரின் சில போடோகள்: (Photos courtesy: Economic times)

மனைவி மோலி மற்றும் குழந்தை நிர்மலாவுடன்

Add an Image

Related Posts

மரபணு மாற்றப்பட்ட மீன்! மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பற்றிய சச்சரவுகளே தீர்ப...
மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் வானம் பார்த்த விவசாயமும்... மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பற்றிய சர்ச்சைகள் பற்ற...
சிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்டம்... சிக்கிம் மாநிலம் 2014 வருடத்தில் எல்லா விவசாயமும் ...
விஜய் மல்லையாவும் 7000 கோடி புஷ்வானமும்... விஜய் மல்லையா என்று ஒரு பெரும் பணக்காரர் இருக்கிறா...

One thought on “வெண்மை புரட்சி தந்தை குரியன் மறைந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *