கோடைக்கு மக்காசோளம்

 

கோடையில் நெல்லிற்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யுமாறு நீடாமங்கலம் வேளாண் அதிகாரி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Courtesy:Dinamani
Courtesy:Dinamani

 

 

 

 

 

 

 

 

இது தொடர்பாக வேளாண் கோட்ட உதவி இயக்குநர் ந. இளஞ்செழியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • நெல் அறுவடைக்குப் பிறகு வாய்ப்புள்ள இடங்களில் மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம்.
  • நிலத்தடிநீரை சேமிக்க தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல் பயிரை தவிர்ப்பது நல்லது.
  • கடந்த ஆண்டு வடுவூர் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்து நல்ல மகசூல் மூலம் அதிக லாபம் அடைந்து  உள்ளனர்
  • கால்நடை மற்றும் கோழி தீவனத்திற்கு மக்காச்சோளம் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் சந்தை வாய்ப்புகள் நன்றாகவுள்ளன.
  • மக்காச்சோளத்திற்கு தை பட்டம் (ஜனவரி, பிப்ரவரி) சிறந்தது. கோ-1, கோஎச் (எம்)-5, கோபிசி-1 மற்றும் தனியார் வீரிய ஒட்டு ரகங்களை பயன்படுத்தலாம்.
  • நிலத்தை நன்கு உழவு செய்து ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் மற்றும் சூப்பர்பாஸ்பேட் 118 கிலோ கலந்து அடியுரமாக இட வேண்டும்.
  • விதையளவு ஏக்கருக்கு 8 கிலோ. விதையை ஒரு கிலோவிற்கு சூடோமோனஸ் 10 கிராம் வீதம் கலந்து 24 மணிநேரத்திற்கு பிறகு ஓர் ஏக்கருக்கு தேவையான ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போபேக்டீரியாவை கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
  • பாருக்குபார் 60 செமீ. இடைவெளியும், செடிக்கு செடி 25 செமீ. இடைவெளியும் இருக்குமாறு விதைக்க வேண்டும்.
  • ஒரு சதுர மீட்டருக்கு 6 முதல் 7 செடி இருக்குமாறு பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
  • விதைத்த 25-வது நாளில் 66 கிலோ உரத்தில் பாதியை இட்டு மண்ணால் மூட வேண்டும்.
  • மீண்டும் 45-வது நாள் 33 கிலோ யூரியா, 25 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து இடவேண்டும். பார்களுக்கு குறுக்கில் 6 மீட்டர் நீளத்தில் பாசன வாய்க்கால் அமைக்க வேண்டும்.
  • களையை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 கிராம் அட்ரசின் 50% நனையும் தூள் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 3 நாட்கள் கழித்து தெளிக்க வேண்டும். 45-வது நாளில் களைகளை எடுக்க வேண்டும்.
  • குழிக்கு இரண்டு விதைகள் முளைத்திருந்தால் 12-வது நாளில் குழிக்கு ஒன்று வீதம் வளர்ந்த செடியை விட்டுவிட்டு, மற்றதை பிடுங்கிவிட வேண்டும்.
  • பயிரின் தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • பயிரின் வயதை கணக்கிட்டு அறுவடை செய்ய வேண்டும்.
  • மக்காச்சோளத்தை சாகுபடி செய்து குறைந்த நீரில் நிறைந்த லாபம் எடுக்கலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *