சோளத்தில் தாக்கும் பூச்சிகள் அங்கக வழி மேலாண்மை

சோளத்தை தாக்கும் பூச்சிகளை இயற்கை வழியில் எப்படி கட்டுபடுத்தலாம்? தமிழ்நாடு வேளாண் பலகலை இணையத்தளத்தில் இருந்து தகவல்கள் –

குருத்து ஈ மேலாண்மை:

  • கோ 1, அஹாரி என்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.
  • பருவ மழை பெய்தவுடன் சோளம் விதைப்பு செய்து குருத்து ஈ தாக்குதலைக் குறைக்கலாம்.
  • அறுவடைக்கு பின் நிலத்தை உழவு செய்ய வேண்டும் மற்றும் பயிரின் தண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • ஒரு எக்டருக்கு 12 கருவாட்டுப் பொறியை வைக்க வேண்டும். இதனை பயிரின் வயது 30 நாள் ஆகும் ஆகும் வரை வயலில் வைத்து ஈக்களைக் கவர்ந்து அழிக்கவும்.

தண்டு துளைப்பான் மேலாண்மை:

  • அவரை அல்லது தட்டைப்பயிரை, சோளத்துடன் 4:1 என்ற விகிதத்தில் ஊடுபயிராக விதைப்பு செய்து தண்டு துளைப்பானை தவிர்க்கலாம்.
  • விளக்குப் பொறியை நடு இரவு வரை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கவும்.
  • உயிரியல் முறைகள் கட்டுப்பாட்டு காரணிகளான டிரைக்கோகிரம்மா மைனூட்டம் , ஃபிரக்கான் சைன்னாஸிஸ் (முட்டையைத்தாக்கும் ஒட்டுண்ணிகள்) மற்றும் மைக்ரோ ஃபிரக்கான் சில்லோசிடா புழுப் பருவ ஒட்டுண்ணிகள்)  போன்றவற்றை நடவு வயலில் வைக்கவும்.

இளஞ்சிவப்பு தண்டுப் புழு மேலாண்மை

  • டிரைக்கோகிரம்மா மைனூட்டம் என்ற முட்டையைத்தாக்கும் ஒட்டுண்ணியை வைக்கவும்.
  • புழுப் பருவ ஒட்டுண்ணி : அபான்டிலஸ் ஃபிலாப்ஸ் , ஃபிரக்கான் டிரைன்னன்ஸிஸ்
  • கூட்டுப்புழு ஒட்டுண்ணி: டெட்ராடிக்கஸ் அய்யாரி

தானிய ஈ மேலாண்மை

  • விளக்குப் பொறியை நடு இரவு வரை வைத்து தானிய ஈ மற்றும் கதிர்ப்புழு போன்ற பூச்சிகளை கவர்ந்து அழிக்கவும்.

குருத்து நாவாய்ப் பூச்சி மேலாண்மை

  • முட்டையைத்தாக்கும் ஒட்டுண்ணிகள் :  பேராங்கரஸ் ஆட்டாபிலிஸ்,ஆக்டிடிராஸ்டிக்கஸ் இன்டிகஸ்
  • ஊண் விழுங்குதல் :  கோச்சினில்லினா செப்படம்புண்டோடா, ஜியோகோரிஸ் டிரைக்கோலர்

கதிர் நாவாய்ப் புழு மேலாண்மை

  • விளக்குப் பொறியை நடு இரவு வரை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கவும்.
  • ஒரு எக்டருக்கு 12 இனக் கவர்ச்சிப் பொறியை வைத்து கதிர் புழுவின் ஆண் அந்திப்பூச்சிகளை கதிர் வரும் பருவத்திலிருந்து தானிய முறை வரை கவர்ந்து அழிக்கவும்.
  • என்.பி.வி , நச்சுயிரி 1.5 x 10 12 நச்சுயிரி கிருமிகள் , 2.5 கிலோ வெல்லம், 250 கிராம் பருத்தி பருத்தி விதைத்தூள் கலந்து 10 நாள் இடைவெளியில் 2 முறை  கதிர் வரும் பருவத்தில் தெளிக்கவும்.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *