தக்காளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்: புரோடினியா

தாக்குதலின் அறிகுறிகள்:

 • இளம்புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போல் ஆக்கியிருக்கும்
 • வளர்ந்த புழுக்கள் இலைகள் அனைத்தையும் தின்று அழித்துவிடும்
புழுவின் சேதம் இலைகளை அரித்தல் இலைகளில் சேதம் பூவில் சேதம்

பூச்சியின் விபரம்:

 • முட்டை: தாய்ப்பூச்சி இலையில் சந்தனப் பொட்டு போன்று குவியலாக முட்டையிட்டு உரோமத்தால் மூடும்.
 • புழு: இளம்புழுக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இருக்கும். புழு கருமை கலந்த பச்சையாகவும், உடம்பில் திட்டுத் திட்டான கரும்புள்ளிகனும் காணப்படும்.
 • முதிர்பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும். முன் இறகானது பழுப்பு நிறத்துடன் அலைஅலையாய் வெள்ளை நிற கோடுகளுடன் ,பின் இறகானது வெள்ளை நிறத்துடன் ,பழுப்பு நிற கோடுகளுடன் காணப்படும்
புழுமுதிர்பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:

 • நிலத்தை உழுது மன்னில் புதைந்துள்ள கூட்டுப் புழுக்களை வெளிப்படுத்தி அழிக்கவும்
 • வயில் வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராக பயிரிட்டு அதில் காணப்படும் இளம் புழுக்கள் மற்றும் முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழிக்கவும்
 • ஒரு ஹெக்டேருக்கு ஒரு விளக்கு பொறி அமைக்கவும்.
 • இனக்கவர்ச்சிப்பொறி (ஃபெரோடின் எஸ்.எல்.) ஏக்கருக்கு 15 வைத்து ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிக்கவும்.
 • வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்
 • புரோடினியா என்.பி.வி வைரஸ் 100 புழு சமன் அளவு (ஏக்கருக்கு 300 நோயுற்ற புழுக்கள்) கிருமியுடன் 2.5 கிராம் வெல்லம் மற்றும் 0.1 சதம் பீபால் கலந்து மாலை நேரத்தில் தெளிக்கவும்
 • நச்சுக்கவர்ச்சி உணவு:  ஒரு ஏக்கருக்கு 5 கிலோ அரிசித் தவிடு + 500 கிராம் வெல்லம் + 500 கிராம் கார்பரில் 50 சத நனையம் àள் கலந்து போதிய நீர் தெளித்து சிறுசிறு உருண்டைகளாக்கி நச்சுணவு வைக்க வேண்டும்

நன்றி:  தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மழையிலும் லாபம் கொடுத்த தக்காளி... 'ஐந்து மாத தக்காளி பயிரில் மழை பெய்தபோதும் சிந்தாம...
இயற்கை வேளாண்மையில் தக்காளி சாகுபடி வீடியோ... இயற்கை வேளாண்மையில் தக்காளி சாகுபடி பற்றிய ஒரு வீட...
தக்காளி பயிரில் புது முறை சாகுபடி... பூ, இலைகள் உதிர்ந்த பிறகும், தக்காளிச்செடிகளுக்கு ...
தக்காளி சாகுபடி டிப்ஸ் ஆண்டு மூழுவதும் பயிர் செய்யக்கூடிய தக்காளியை நல்ல ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *