குதிரை மசால் சாகுபடி

குதிரை மசால் [மெடிக்காகோ சைட்டைவா]

‘தீவனங்களின் அரசி’ என்று அழைக்கப்படுகின்ற இதில் 20 சதவீதம் புரதச்சத்தும், 2.30 சதவீதம் சுண்ணாம்பு சத்து 0.23 சதவீதம் பாஸ்பரஸ் சத்தும் உள்ளது.

இதனை தினமும் கால்நடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுதான் கொடுக்கவேண்டும். இதன் அளவு அதிகமானால் “வயிறு உப்பல்” ஏற்பட வாய்ப்புள்ளது.

இது குளிர்கால இறவைப் பயிராகும்.

பருவம் : புரட்டாசி மாதம் ஏற்ற தருணம்

நிலம் : வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான நிலம்

விதை : 8 கிலோ

இடைவெளி : வரிசைக்கு வரிசை 30 செ.மீ. வரிசையில் நெருக்கமாக விதைக்கவேண்டும்.

இரகம் : கோ-1

உரஅளவு அடியுரம் : தொழு உரம் – 10 டன்கள், தழைச்சத்து – 10 கிலோ மணிச்சத்து – 48 கிலோ, சாம்பல் சத்து -16 கிலோ

மேலுரம் : 50 சதவீதம் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும்

மகசூல் : 28-32 டன்கள் பசுந்தீவனம் கொடுக்கவேண்டும்

குறிப்பு : மூன்றாவதாண்டுப் பயிரின் மகசூல், முதலாண்டுப் பயிரின் மகசூலில் 60 சதவீதம் இருப்பதால், இப்பயிரை இரண்டாண்டுக்குப் பின் அழித்துவிட்டு புதிதாகப் பயிர் செய்ய வேண்டும்.

தகவல்: முனைவர் க.இராமகிருஷ்ணன், முனைவர் க.சிவக்குமர், முனைவர் வே.இரமேஷ் சரவணகுமார், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் – 637 002.

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்

Related Posts

பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்... பசுக்கள் வளர்க்கும் விவசாயிகள் கம்பி நேப்பிய...
அற்புத கால்நடை தீவனம் அசோலா அற்புத கால்நடை தீவனமான அசோலா பற்றி ஏற்கனவே நாம் பட...
கால்நடைகளுக்கு தீவனம் வெட்டும் இயந்திரம்... தீவனப் பற்றாக்குறையை போக்குவதற்கு விவசாயத்துறையும்...
பசுந்தீவனத்துடன் அசோலா தாவரம்: பால் உற்பத்தி அமோகம்... பசு மாடுகளுக்கு அசோலா தாவரத்தை தீவனமாக கொடுப்பதன் ...

One thought on “குதிரை மசால் சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *