மண்ணில் புதைத்து கிடைக்கும் கால்நடை ‘ஊறுகாய் புல்’ தீவனம்

மழைக் காலத்தில் பசுந்தீவனம் தட்டுப்பாடு இருக்காது. வறட்சியில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவது பெரும் சவாலாகும். வறட்சியை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் பலர் மாடுகளை விற்று விடுவர்.
வறட்சியை சமாளிக்கும் வகையில் மூன்று ஆண்டு வரை தட்டுப்பாடு இன்றி கால்நடைகளுக்கு தீவனம் வழங்க வழிகாட்டுகிறார் தேனி மாவட்டம் தப்புக்குண்டு விவசாயி மணிகண்டன்.
இவர் 40 மாடுகளுடன் பால் பண்ணை நடத்துகிறார். தீவன தட்டுப்பாட்டை சமாளிக்க தேனி உழவர் பயிற்சி மையத்தை நாடினார்.தொழில் நுட்ப ஆலோசனை பெற்று தற்போது 120 டன் கால்நடை தீவனத்தை ‘ஊறுகாய் புல்’ ஆக தயாரித்து மண்ணில் புதைத்துள்ளார்.தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறார்.
மணிகண்டன் கூறியதாவது:
  • பசுந்தீவனத்தில் ஊறுகாய் புல் (சைலேஜ்) தயாரிக்க முடியும்.
  • கோ–4, தீவனச் சோளம், மக்காச் சோளம் ஆகியவற்றில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. அதனை வெட்டி நிழலில் 2 மணிநேரம் உலர்த்தி 20 சதவிகித நீர்ச்சத்து வெளியேறி 65 சதவீத நீர் சத்துள்ள நிலையில் புல் வெட்டும் இயந்திரம் மூலம் இரண்டு, மூன்று துண்டாக வெட்டி கொள்ள வேண்டும்.
  • 10 அடி அகலம், இரண்டரை அடி ஆழத்தில் குழி எடுத்து அதில் ‘தார்ப்பாய்’ விரித்து கொள்ள வேண்டும்.
தயாரிப்புமுறை
  • 100 கிலோ ஊறுகாய் புல் தயாரிக்க 2 சதவிகித மொலாசஸ் அல்லது இனிப்பு சத்து (கருப்பட்டி), 2 சதவிகித கம்பு மாவு, 0.5 சதவிகித தயிர் ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் கலந்து கரைசல் தயாரிக்க வேண்டும்.
  • பின் வெட்டிய தீவனத்தை குழியில் பரப்பி அதன் மீது கரைசலை தெளிக்க வேண்டும். அடுத்து தீவனத்தை பரப்பி கரைசல் தெளிக்க வேண்டும். தீவனத்தில் உள்ள ஆக்சிஜன் வெளியேறும் வகையில் ‘இறுக்கம்’ செய்ய வேண்டும்.
  • இதேபோல் தீவனத்தை அடுக்கி நெருக்கமாக செய்து மேலே தார்ப்பாய் கொண்டு காற்றுப்புக முடியாத வகையில் மூடி மேற்பரப்பில் மண்ணால் மூடிவிட வேண்டும். குறைந்தது மூன்று மாதம் திறக்க கூடாது.
  • அதன்பின் குழியை திறந்து தேவைக்கு ஏற்ப பயன்டுத்தலாம்.120 டன் ஊறுகாய்வறட்சியால் விளைச்சல் இன்றி போகும் நிலையில் உள்ள பசுந்தீவனம் 20 ஏக்கர் மொத்தமாக வாங்கினேன்.ஒரு குழியில் 15 முதல் 20 டன் என்ற அளவில் ‘ஊறுகாய்புல்’ தயாரித்து மூடியுள்ளேன். இதுபோன்று 8 குழிகள் உள்ளன. இதில் 120 டன் தீவனம் இருப்பு வைத்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகிறேன்.
  • 3 ஆண்டு வரை பயன்படுத்தலாம். இனிப்பு, கம்புமாவு, தயிர் கலவையால் நியூட்டரின் சத்து நிறைந்த ஊறுகாய் புல்லில் ‘புரோ பயோடிக்’ எனும் நன்மை செய்யும் நுண்ணுயிர் அதிகரித்து விடும்.
  • இதனை உண்ணும் கால்நடைகளுக்கு செரிமான கோளாறு வராது. 30 கிலோ பசுந்தீவனம் கொடுக்கும் நியூட்ரின் சத்து அதிகரித்து பால் சுரப்பு கூடும், என்றார்.
தொடர்புக்கு 09943137658
-வி.ரவி, திண்டுக்கல்
நன்றி: தினமலர் 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *