நுனி கிள்ளுதல் மூலம் துவரையில் கூடுதல் மகசூல்

  • துவரை சாகுபடியில் நுனியை கிள்ளி விடுவதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம் என வேளாண்மை துறையினர் யோசனை தெரிவித்தனர்.
  • நத்தம், சிறுகுடி, காசம்பட்டி, பட்டணம்பட்டி, மூங்கில்பட்டி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மானாவரியாக துவரை சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் பூவில் இருந்து காய் பிடிக்கும் தருவாயில் உள்ளது.
  • செடியின் நுனியை கிள்ளி விடுவதால் பக்க கிளைகள் வளர்ந்து, அதிக பூக்கள் பூத்து காய் பிடிக்க வாய்ப்புள்ளது.
  • மேலும் மகசூலை அதிகரிக்க இரண்டு சத டி. ஏ. பி., கரைசலை மாலை நேரத்தில் தெளிக்கலாம்.
  • அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் டி. ஏ. பி., உரம் வாங்கி ஏக்கருக்கு 10 கிலோ வீதத்தில் கரைசல் தயாரித்து தெளிக்கலாம். கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்படும் உரங்களின் பட்டியல் , வங்கி கணக்கு மற்றும் இதர விபரங்களை வேளாண்மை அலுவலகத்தில் சமர்ப்பித்து, 2.5 ஏக்கருக்கு ரூ.650 வீதம் மானியம் பெறலாம்.
  • மானியம் அவரவர் வங்கி கணக்கு மூலம் வழங்கப்படும். இதுதொடர்பான விபரங்களுக்கு நத்தம் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என, விவசாய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

துவரை மகசூலை அதிகரிக்க வழிகள்...  துவரை மகசூல் செய்வதன் மூலம் விவசாயிகள் நல்ல லாப...
துவரையின் சாகுபடி, விதை நேர்த்தி முறைகள்... துவரை முக்கிய பயறு வகைகளில் ஒன்று. இதனை ஏழையின் மா...
துவரை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்... துவரை சாகுபடி முறையில் புதிய தொழில் நுட்பத்தை பயன்...
துவரை விளைச்சலை அதிகரிக்க யோசனைகள்... விவசாயிகள் நடவு முறையில் துவரை விளைச்சலை அதிகரிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *