அதிக மகசூல் பெற தென்னைக்கு உரமிடும் வழிமுறை

அதிக மகசூல் பெற தென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

  • தென்னைக்கு உரமிடுவதற்கு ஏதுவாக தற்போது நல்ல மழை பெய்து வருகி றது.
  • இதை பயன்படுத்தி நாட்டுரக (நெட்டை ரகம்) தென்னைகளுக்கு நடவு செய்தது முதல் ஒரு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 10 கிலோ, யூரியா 325 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 500 கிராம், வேப்பம்புண்ணாக்கு 1.500 கிலோ இட வேண்டும்.
  • 2 வருட கன்றுக்கு தொழு உரம் 20 கிலோ, யூரியா 650 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 1 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 2.500 கிலோ. 3 ஆண்டு கன்றுக்கு தொழு உரம் 30 கிலோ, யூரியா 975 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 1.500 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 3.750 கிலோ இட வேண்டும்.
  • 4 ஆண்டு கன்றுக்கு தொழு உரம் 40 கிலோ, யூரியா 1.300 கிலோ, சூப்பர் ற்றும் பொட்டாஷ் தலா 2 கிலோ, வேப்பம்புண் ணாக்கு 5 கிலோ. 5 ஆண்டு கன்றுக்கு தொழு உரம் 50 கிலோ, யூரியா 1.300 கிலோ, சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 2 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ இட வேண்டும்.
  • வீரிய ஒட்டு (நெட்டைஜ்குட்டை மற்றும் குட்டைஜ்நெட்டை) ரக தென்னைகளுக்கு ஒரு வருட கன்றுக்கு தொழு உரம் 15 கிலோ, யூரியா 500 கிராம், சூப்பர் 375 கிராம், பொட்டாஷ் 750 கிராம், வேப்பம்புண்ணாக்கு 1.500 கிலோ.
  • 2 வருட கன்றுக்கு தொழு உரம் 30 கிலோ, யூரியா 1 கிலோ, சூப்பர் 750 கிராம், பொட்டாஷ் 1.500 கிலோ, வேப்பம்புண் ணாக்கு 2.500 கிலோ இட வேண்டும்.
  • 3 வருட கன்று க்கு தொழு உரம் 45 கிலோ, யூரியா 1.500 கிலோ, சூப்பர் 1.150 கிலோ, பொட்டாஷ் 2.250 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 3.750 கிலோ.
  • 4 வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மரம் ஒன்றுக்கு தொழு உரம் 60 கிலோ, யூரியா 2.250 கிலோ, சூப்பர் 1.500 கிலோ, பொட்டாஷ் 3 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ இட வேண்டும்.
  • மேற்கண்ட உர பரிந்துரை அளவை சமபங்காக பிரித்து ஆண்டுக்கு இருமுறை இட வேண்டும். அதாவது மார்கழி, தை மாதங்களில் ஒரு முறையும், ஆனி, ஆடி மாதங்களில் ஒரு முறையும் இட வேண்டும். மேற்கண்ட உரங்களை இட்ட 30 முதல் 45 நாட்கள் கழித்து தென்னை நுண்சத்து உரத்தை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இவ்வகை உரங்களை மரத்தை சுற்றி 5 அடி தூரத்தில் இட்டு மண்ணை கிளறி விட்டு உடனடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இவ்வாறு செய்தால் ஆண்டுக்கு சராசரியாக 150 முதல் 200 தேங்காய்கள் வரை மகசூல் எடுக்க முடியும்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *