தென்னையில் கருந்தலை புழு தாக்குதல் தடுப்பு முறை

தென்னையில், கருந்தலை புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்’ என, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் லோகநாத பிரகாசம் தெரிவித்துள்ளார்.

 • கருந்தலைப்புழுக்கள், இலைகளின் அடிப்பரப்பில் தனது கழிவுகளையும், கைகளையும் கொண்டு நூலாம் படையினைப் பின்னிக்கொண்டு, அதனுள் இருந்து கொண்டே, பச்சயத்தை சுரண்டி உண்ணும்.
 • சேதநிலை அதிகமானால், தென்னை ஓலைகள் தீய்ந்து கருகிவிடும்.
 • தூரத்தில் இருந்து மரத்தைப் பார்த்தால், இலைகள் எரிந்து கருகியது போல் தோற்றமளிக்கும். அதனால், தென்னை மரங்களில் ஒளிச்சேர்க்கை குறைந்து, மகசூல் குறைந்து விடும்.
 • கருந்தலைப் புழுவின் பெண் அந்துப்பூச்சிகள் சாம்பல் நிறமுடையது.இது, 130 முட்டைகள் வரை, குவியல் குவியலாக இலைகளில் இடுகின்றது.
 • புழுக்கள் பச்சையம் கலந்த பழுப்பு நிறத்தில் கறுப்பு நிறத் தலையுடன் இருக்கும்.
 • அவற்றை கட்டுப்படுத்த முதலில் சேதப்பட்ட இலைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
 • ஆரம்ப நிலையில் கருந்தலைப்புழுவின் இயற்கை எதிரியான ஒட்டுண்ணிகளை விடவேண்டும்.
 • புழு ஒட்டுண்ணிகளை கருந்தலைபுழுவின் இரண்டு மற்றும் மூன்றாம் புழு வளர்ச்சிப் பருவத்திலும், கூட்டுப்புழு ஒட்டுண்ணியை, கூட்டுப்புழு ஆரம்ப நிலையிலும் வெளியிட வேண்டும்.
 • ஒட்டுண்ணிகளை இலைப்பகுதியில் மட்டுமே விடவேண்டும்.
 • ஒட்டுண்ணியை விட்ட மூன்று வாரத்துக்கு பின்னரே, பூச்சிக்கொல்லியை பயன்படுத்த வேண்டும்.
 • தாக்குதல் அதிகமாக இருக்கும் போது, ஒரு லிட்டர் தண்ணீருக்கு டைகுளோரவாஸ், 76 டபிள்யு.எஸ்.இ., இரண்டு மி.லி., அல்லது மாலத்தியான், 50 இ.சி., ஐந்து மி.லி., மருந்தை ஒரு மி.லி., ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

இத்தகைய தடுப்பு முறைகளை விவசாயிகள் பயன்படுத்தி, கருந்தலைப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

தென்னையை தாக்கும் “பென்சில் பாயிண்ட்’ நோய்... கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்னையில் நுண்ணூட்ட சத்...
தென்னையில் கோகோ ஊடு பயிர் தென்னையில் கோகோ ஊடுபயிர் பற்றி ஏற்கனவே படித்து உள்...
இயற்கை முறையில் தென்னை ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு... இயற்கை முறையில் விவசாயம் செய்யும் கொழுமம் கிராமத்த...
தென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்... தென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *