தென்னையை தாக்கும் வண்டுப்பூச்சி

தென்னையை தாக்கும் சிகப்பு கூன் வண்டு பூச்சிகளை கட்டுப்படுத்திட, விவசாயிகள் உரிய மருந்துகளை முறையாக பயன்படுத்தி வேண்டும்’ என, தோகைமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 • தென்னை மரத்திலுள்ள ஓட்டைகளில் சிகப்பு கூன் வண்டு தாக்கியதால், பஞ்சு போன்ற கழிவுகள் காணப்படும்.
 • செம்பழுப்பு நிற திரவமும், இந்த ஓட்டைகள் மூலமாக கசிந்து கொண்டிருக்கும்.
 • தென்னை மரத்தில் காதை வைத்து கேட்டால், சிகப்பு கூன் வண்டு புழுக்களின் நடமாட்டத்தை நன்கு கேட்கலாம்.
 • பாதிக்கப்பட்ட மரத்தை தட்டினால், பொத்தென்று சத்தம் கேட்கும்.
 • பெரும்பாலும், ஒன்று முதல், 20 வயதுக்குட்பட்ட தென்னை மரங்கள் அதிக அளவில் சிகப்புக் கூன் வண்டால் தாக்கப்படுகின்றன.
 • சிகப்பு கூன் வண்டு பழுப்பு நிறத்தில், உருண்டை வடிவில் நீண்ட வளைவான மூக்கு பகுதியுடன் காணப்படும்.
 • தென்னை மரத்தின் சேதப்படுத்தப்பட்ட தண்டு பகுதியில், பெண் வண்டு முட்டைகள் இருக்கிறது. இதிலிருந்து வெளிவரும் புழுக்கள், தென்னை மரத்தின் மிருதுவான பகுதியையும், நுனிப் பகுதியையும் உண்டு சேதப்படுத்துகிறது.
 • இதனால் மரம் இறந்து விடும் வாய்ப்பும் உண்டாகிறது.
 • தென்னந்தோப்பை சுத்தமாக வைக்க வேண்டும்.
 • மரத்தின் மீது கத்தி அல்லது அரிவாள் கொண்டு சேதப்படுத்தக்கூடாது.
 • மரத்தில் துளை இருப்பின், அதனை தார், பூச்சிக்கொல்லி கொண்டு அடைக்கலாம்.
 • பச்சை மட்டைகளை வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டுவதாக இருந்தால், நான்கு அடி விட்டு வெட்டவேண்டும்.
 • தோப்பில் பட்டுபோன மரங்கள் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும்.
 • மேலும், 10 மில்லி மானோகுரோட்டோபாஸ் மருந்தை, அதே அளவு தண்ணீருடன் கலந்து, வேர் மூலமாக செலுத்தி சிகப்பு கூன் வண்டை கட்டுப்படுத்தலாம்.
 • மருந்து செலுத்துவதற்கு முன்பு காய்களை பறித்துவிட வேண்டும்.

நன்றி: தினமலர் 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்… இருந்தும்..... தேங்காய் உற்பத்தியில் இதுவரை முதலிடத்தில் இருந்த...
தென்னையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு... எலி மரத்தில் ஏறுவதைத் தடுக்க, பெரிய பனை ஓலையை ந...
நல்ல விளைச்சல் தரும் யாழ்ப்பாணம் தென்னை... கீழக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாழ்ப்பாணம் தேங...
தென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை... விவசாயிகளுக்கு நல்ல வருவாய் தரக் கூடிய பயிராக தென்...

2 thoughts on “தென்னையை தாக்கும் வண்டுப்பூச்சி

  • gttaagri says:

   No Sir, not anything we are aware of – to control வண்டுப்பூச்சி without மானோகுரோட்டோபாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *