தென்னை கன்றுகள் விற்பனைக்குத் தயார்

மேற்குக் கடற்கரையிலுள்ள நெட்டை, செüகாட் இளநீர் ரக தென்னை மரக்கன்றுகள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் விற்பனைக்குத் தயாராக உள்ளன.

இதுகுறித்து அந்த நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • மேற்குக் கடற்கரை நெட்டை தென்னைக் கன்றுகள் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவை.
  • கொப்பரைக்கு மிகவும் உகந்த இந்தக் காய்களில் 68 முதல் 71 சதம் எணணெய் உள்ளது.
  • ஒரு டன் கொப்பரை எடுக்க சுமார் 5000 முதல் 7000 வரை காய்கள் மட்டுமே தேவைப்படும் என்று கேரளத்திலுள்ள மத்திய தென்னை ஆராய்ச்சி நிலையம் சான்றளித்துள்ளது.
  • அதேபோல, செüகாட் ரக தென்னைக் கன்றுகள் இளநீருக்காக வளர்க்கப்படும் சிறப்பான ரகமாகும்.
  • இவற்றில் இளநீரின் அளவு அதிகமாக இருப்பதுடன் நுண்ணூட்டச்சத்துக்களும் அதிகளவில் உள்ளன.
  • இந்த இரு ரக தென்னைக் கன்றுகள் மழைக் காலத்தில் நடவு செய்ய ஏற்றதாக உள்ளதால் தங்கள் பண்ணைகளில் தென்னை நடவு செய்ய விரும்பும் விவசாயிகள், பண்ணையாளர்கள் நெட்டை, சௌகாட் ரக தென்னைக் கன்றுகளை நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
  • தேவைக்கு ஏற்ப 6 முதல் 8 மாதம் வரை வளர்ச்சியடைந்த தென்னைக் கன்றுகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன.
  • மேலும் விவரங்களுக்கு 04286266345, 04286266650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *