தென்னை தரும் விற்பனை வாய்ப்புகள் : பயிற்சி முகாம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத்துறை சார்பில் தென்னை தரும் விற்பனை வாய்ப்புகள் தலைப்பில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வரும் 31ம் தேதி நடைபெறும் பயிற்சி முகாமில் தென்னை உற்பத்தி தொழிலதிபர்கள், முன்னோடி விவசாயிகள், வேளாண் அறிஞர்கள் மற்றும் நுகர்வோர்கள் தென்னையில் உள்ள விற்பனை வாய்ப்புகள் பற்றி நேரடி விளக்கம் அளிக்க உள்ளனர்.

இம்முகாமில் பங்கேற்று பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயர், முகவரி, கல்வி தகுதி, புகைப்படம், மொபைல் எண் ஆகியவற்றை 5 ரூபாய் தபால் தலை ஒட்டப்பட்ட சுய விலாசமிட்ட உறையுடன்

ஒருங்கிணைப்பாளர் (தென்னை தரும் விற்பனை வாய்ப்புகள் பயிற்சி) வேளாண் பொருளாதாரத்துறை, வேளாண் புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர் என்ற முகவரிக்கு

வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு வேளாண் பொருளாதாரத்துறை பேராசிரியர் சுந்தரவரதராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி: தினமலர்

 

Related Posts

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி... காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சிஇடம்: க்ரிஷ...
தென்னை சாகுபடி இயந்திரங்கள் – II... எரிபொருள் கரி (தயாரிக்கும்) இயந்திரம் செயல்பாடு :...
தென்னையில் நீர் மேலாண்மை 1. சொட்டு நீர் பாசனத்தின் பயன்கள் என்ன? பாத்திப் ...
இலவச கால்நடை வளர்ப்பு பயிற்சிகள்... திண்டுக்கல் கால்நடை மருத்தவ அறிவியல் பல்கலை கழகத்த...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *