தென்னை நார் கழிவு உரம்

பெரியகுளம் பகுதியில், தென்னை நார் கழிவை இயற்கை சுழற்சி முறையில், உரமாக நிலங்களுக்கு பயன்படுத்துவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பெரியகுளம் பகுதியில், ஆயிரம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.

தேங்காயில் இருந்து எண்ணெய், மட்டையிலிருந்து கயறு உட்பட தென்னையின் அனைத்து பகுதிகளும் உபயோகமாகிறது.

பெரியகுளம், கள்ளிப்பட்டி, கைலாசபட்டி பகுதியில் மட்டையிலிருந்து கயறு தயாரிக்கப்பட்டு கடைசியாக நார்க்கழிவுகள் வீணாகின்றன.

நார்க்கழிவுகளை தீயிட்டு கொளுத்துவதால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது.

பெரியகுளம் பகுதியில், விவசாயிகள் சிலர் வீணாகும் நார்க்கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி, மண்ணின் நீர்பிடிப்பு தன்மையை அதிகரிக்க செய்கின்றனர்.

ஒரு எக்டேர் பரப்பளவில் உள்ள தென்னையில் இருந்து, ஆயிரம் முதல் 1,500 வரை மட்டைகள் கிடைக்கின்றன.

இவற்றில் இருந்து ஒரு டன் எடையுள்ள நார்க்கழிவுகள் கிடைக்கும்.

இந்த நார்க்கழிவுகளை சிப்பிக்காளான் பயன்படுத்தி, சத்துமிக்க இயற்கை உரமாக தயாரிக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

தென்னையில் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு வீடியோ... தென்னையில் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு பற்றிய ...
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் புதிய தென்னை ரகங்கள்... "ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் வறட்சியை தாக...
தென்னை மரத்துகான டானிக் தென்னைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்...
தென்னையில் ஊடுபயிராக சேனைக்கிழங்கு... தென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *