தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு

தென்னை மரத்தின் பாளையை காண்டாமிருக வண்டுகளும், தண்டுப் பகுதியை சிகப்பு கூன் வண்டுகளும் சேதப்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.

  • காண்டாமிருக வண்டு தாக்கப்பட்ட தென்னை இலைகள் முக்கோண வடிவில் வெட்டியது போல் காணப்படும்.
  • துளைக்கப்பட்ட தண்டுப் பகுதியின் துவாரத்திலிருந்து, மரச்சக்கைகள் வெளியே தள்ளப்பட்டிருக்கும்.
  • இவ்வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, எருக்குழியில் கார்பரில் தூள் இரண்டு கிராமில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தெளித்தால் முட்டை மற்றும் கூட்டுப் புழுக்கள் அழியும்.
  • வேப்பங்கொட்டைத்தூளுடன் மணல் சமபங்கு கலந்து குருத்துப் பகுதியின் மேல் மூன்று மட்டை இடுக்குகளில் மரத்திற்கு 150 கிராம் இடுவதன் மூலமும், அந்து உருண்டைகளை மட்டைக்கு ஒன்று வீதம் வைப்பதன் மூலமும் அழிக்க முடியும்.
  • ஒரு பாளையில் ஆமணக்கு, கொட்டைமுத்து புண்ணாக்கு ஒரு கிலோ இட்டு முக்கால் பாகம் தண்ணீர் நிரப்பி மூன்று நாட்கள் ஊறவைத்து தெளிக்க வேண்டும்.
  • மெட்டாரைசியம் என்னும் பூஞ்சாளத்தை உபயோகித்தும் வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்

இவ்வாறு இவ்வண்டுகளால் ஏற்படும் சேதங்களை கட்டுப்படுத்துவது குறித்து விநாயகபுரம் வேளாண்மை துணை இயக்குனர் காதிரி தெரிவித்து உள்ளார்.

நன்றி: தினமலர்

தென்னை பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்

Related Posts

தென்னையில் ஊட்டச்சத்து மேலாண்மை... தென்னையின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சலுக்கும் பேர...
தென்னை நார்க்கழிவு கம்போஸ்ட் தோட்டக்கலை பயிர்களில் மட்கும் உரமாக தென்னை நார்க்க...
தென்னையில் நீர் மேலாண்மை 1. சொட்டு நீர் பாசனத்தின் பயன்கள் என்ன? பாத்திப் ...
தேங்காய் பறிக்க நூதன திட்டம்!! திருவனந்தபுரம்: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு த...

One thought on “தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *