தென்னை மரம் ஏற பயிற்சி

கிருஷ்ணகிரி அருகே விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து எலுமிச்சங்கிரி டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்னை வளர்ச்சி வாரியத்துடன் இணைந்து தென்னை மரம் ஏறும் 6 நாள் பயிற்சி வேளாண்மை அறிவியல் மையத்தில் வழங்கப்படவுள்ளது.

100 நபர்களுக்கு 5 குழுக்களாகப் பிரித்து பயிற்சி வழங்கப்படும். இதில் பங்கேற்பவர்களுக்கு வயது வரம்பு 45-க்குள்ளும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும். தகுதியுடைய பெண்களும் கலந்து கொள்ளலாம்.

இந்த 6 நாள் பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு தங்கும் வசதி, உணவு, பயிற்சி முடிவில் சான்றிதழ், தென்னை வளர்ச்சி வாரியத்தால் ஒரு லட்சம் ரூபாய் காப்பீடு, தென்னை மரம் ஏறும் கருவியும் கட்டணமின்றி வழங்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 2013 ஜூலை 12-ஆம் தேதிக்குள் வேளாண்மை அறிவியல் மையத்தை நேரடியாக அணுகலாம். அல்லது 04343296039, 09443796968 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை பதிவு செய்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

நன்றி  தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *