நாவல் சாகுபடியில் ரூ. 6 லட்சம்

அவ்வை பாட்டிக்கு கிடைத்த ஞானத்தை போல, நாவல் பழத்தின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மெட்டூர் விவசாயி ஜெயக்குமார்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar
  • இவரது, பண்ணையில் 1.5 ஏக்கரில் குட்டை ரக நாவல் மரங்களையும், மீதி இடத்தில் நெல்லியும் வளர்க்கிறார்.
  • தனது நர்சரிக்காக, ஆந்திராவிற்கு செடிகள் வாங்கப் போன போது, பெரிய நாவல் கனியை பார்த்து சாகுபடி செய்ய ஆவல் கொண்டார்.
  • ஒன்றரை ஏக்கரில் 80 செடிகளை 22 அடி இடைவெளியில் நட்டு, சொட்டு நீர் பாசனம் அமைத்தார்;
  • மரமாகும் வரை இயற்கை உரங்களை மட்டுமே அளித்தார்.
  • அடுத்த நான்கு ஆண்டுகளில், மரத்திற்கு 5 கிலோ பழம் கிடைத்தது. படிப்படியாக விளைச்சல் அதிகரித்து, 11 வது ஆண்டிலிருந்து மரத்திற்கு 60 கிலோ பழம் கிடைக்கிறது.
  • பொதுவாக, நாவல் மரம் 40 அடி வரை வளரும்;
  • பழங்களை பறிப்பது சிரமம். இவரது தோட்டத்தில் தொடர் கவாத்து மூலம் மரம் அதிக உயரம் வளரவில்லை; தரையில் அமர்ந்து கொண்டு பழங்களை பறிக்கலாம்.
  • ஒவ்வொரு பழமும் 15 கிராம் எடையில், தித்திப்பு அதிகம்.
  • ஒவ்வொரு மரத்திலிருந்தும் 60 கிலோ பழங்களை தாராளமாக பறிக்கலாம்.
  • கிலோ 150 ரூபாய்க்கு விற்கிறேன். இரண்டு மாதத்தில் 6.75 லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளேன். செலவு போக 6 லட்ச ரூபாய் கிடைக்கும். ஒரு பழத்தின் விலை 2 ரூபாய்,” என்றார்.

இவரிடம் பேச – 9865925193.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *