திரட்சியான கடலை பெற வேளாண் துறை யோசனை

நிலக்கடலை சாகுபடியின்போது பொக்குகளற்ற திரட்சியான எடை அதிகம் உள்ள நிலக்கடலை பெற ஜிப்சம் இடவேண்டும் என வேளாண் துணை இயக்குநர் ஆர்.அரிவாசகன் தெரிவித்தார்.

  •   நிலக்கடலை சாகுபடியில் பூக்கள் விழுதுகளாக மாறி பூமியினுள் சென்று கடலைகளாக மாற்றம் பெறுகின்றன. இந்த விழுதுகள் பூமியில் இறங்கும்போது மண் பொல பொலப்பாக இருக்க வேண்டும்.
  •   நிலக்கடலையில் பூக்கும் பருவம் 26-ம் நாளில் துவங்கி 45-ம் நாள் விழுதுகள் மண்ணில் இறங்க ஆரம்பிக்கும். அந்த காலகட்டத்தில் மண்ணை கிளறிவிட்டு ஜிப்சம் இட்டு மண் அணைப்பதால் விழுதுகள் எளிதில் மண்ணுக்குள் சென்று காய்கள் பிடிப்பதை அதிகப்படுத்தும்.
  •   தற்போது கார்த்திகைப் பட்டத்தில் மானாவாரியில் செய்யப்பட்ட நிலக்கடலை சாகுபடியில் அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இடவேண்டும். அடியுரமாக இடாதபட்சத்தில் 160 கிலோ ஜிப்சத்தை 40 முதல் 70-ம் நாளுக்குள் செடிக்கு அருகில் இட்டு மண் அணைத்துக் கொடுக்கலாம்.
  •   இதனால் பொக்குகளற்ற, திரட்சியான, எடை அதிகமுள்ள கடலை பெற முடியும். ஜிப்சமானது வேரின் வளர்ச்சியை அதிகப்படுத்தி, நீரை அதிகம் இழுத்து பயிருக்கு கிடைக்கச் செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என அவர் கூறினார்.

நன்றி: தினமணி

Related Posts

நிலக்கடலைக்கு தேவை ஜிப்சம் தென்காசி:நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இட வேண்டும் எ...
நிலக்கடலையில் அதிக இலாபம் பெற வழிகள்... நிலக்கடலையில் அதிகம் இலாபம் பெற தருமபுரி விதைச்...
நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை... வேரழுகல் நோயானது 'மேக்ரோபோமினா பேசியோலினா' என்...
நிலக்கடலை தோல் உரிக்க இயந்திரம்... நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரத்தை கண்டறிந்து, த...

One thought on “திரட்சியான கடலை பெற வேளாண் துறை யோசனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *