நிலக்கடலை சாகுபடிக்கு 50% மானியத்தில் ஜிப்சம்

“நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில், ஜிப்சம் வினியோகம் செய்யப்படுகிறது’ என, நாமக்கல் கபிலர்மலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தங்கராஜூ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

  • கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானிய விலையில், ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்படுகிறது.
  • ஒரு நபருக்கு அதிக பட்சமாக, எட்டு மூட்டை அதாவது, 400 கிலோ ஜிப்சம் வழங்கப்படுகிறது.
  • ஜிப்சம் மானிய விலையில் பெற, நிலத்தின் சிட்டா மற்றும் ரேஷன்கார்டு நகரை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
  • நிலக்கடலையில், திரட்சியான மகசூல் பெற அடியுரமாக, 200 கிலோ ஜிப்சமும், 45வதுந ாளில், 200 கிலோ ஜிப்சமும், 2.50 ஏக்கர் (ஒரு ஹெக்டேர்) பரப்பிற்கு இட வேண்டும்.
  • ஜிப்சம் இடுவதால், எண்ணெய் வித்து கூடுவதுடன், காய்கள் திரட்சியாக பொக்கில்லாமல் கிடைக்கும்.
  • விவசாயிகளுக்கு தேவையான ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழசிராமணி துணை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீதம் மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  • தேவைப்படும் விவசாயிகள், அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

நிலகடலையில் அதிக லாபம் பெற "நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுவதன் மூலம், தரமான ...
மானாவாரி நிலத்தில் கிடைத்த அமோக நிலக்கடலை மகசூல்!... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்...
நிலக்கடலை செடிகளுக்கு இலைவழி உரம்... இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பின்பற்றி, நிலக்கடலை செடிக...
நிலக் கடலையில் அதிக மகசூல் பெற உரமிடும் முறை... நிலக் கடலையில் அதிக மகசூல் பெற  வேளாண் உதவி இயக்கு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *