நிலக்கடலை தோல் உரிக்க இயந்திரம்

நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரத்தை கண்டறிந்து, தேனி பட்டதாரி வாலிபர் சாதனை படைத்துள்ளார்.தேனி சுப்பன்செட்டி தெருவை சேர்ந்த எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி லோகநாதன்காமராஜ், 27.

இவரது தந்தை காமராஜ், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்டோ மொபைல் தொழில் நடத்தி வருகிறார். படிப்பு முடித்ததும், அப்பாவுடன் சேர்ந்து தொழிலில் இறங்கிய லோகநாதன் காமராஜ், புதிதாக சாதனை படைக்க வேண்டும் என நினைத்தார்.

 • தேனியில் வறுத்த நிலக்கடலையை தோல் உரித்து, அதனை பாக்கெட் போட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
 • இப்படி கடலை தோல் உரிக்கும் பணியில் பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.
 • கையில் உரித்தால் ஒரு வேலை நாள் முழுக்க 50 கிலோ மட்டுமே உரிக்க முடியும்.
 • இதனால் கூலி மிகவும் குறைவாகவே கிடைக்கும்.
 • இதனை குறைந்த செலவில் அதிகளவில் செய்ய திட்டமிட்ட லோகநாதன்காமராஜ் கடந்த 2011ல் தனது தந்தையுடன் இணைந்து, இயந்திரம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.
 • மூன்றாண்டு முயற்சிக்கு பின் இயந்திரம் தயாரித்தார்.
 • இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்தில் 100 கிலோ வறுத்த கடலையை தோல் உரித்து பிரித்து கொடுத்து விடுகிறது.
 • இதில் உரிக்கப்படும் கடலை, 75 சதவீதம் முழு பருப்பாகவும், 15 சதவீதம் இரண்டாக உடைந்தும், 5 சதவீதம் உரியாமலும், மீதி உமியாகவும் வரும்.
 • கையில் உரிப்பதோடு ஒப்பிடுகையில் இயந்திரத்தின் மூலம் உரிப்பதால் சேதாரம் மிக, மிக குறைவு தான்.
 • உடைந்த பருப்பை கடலை மிட்டாய்க்கும், முழு பருப்பை ஏற்றுமதிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 • உமியை எரிபொருளாக பயன்படுத்த முடியும்.

லோகநாதன் காமராஜ் கூறியதாவது:

 • சிங்கில்பேஸ் மின்சாரத்தில் இந்த இயந்திரத்தை இயக்க முடியும்.
 • 100 கிலோ பருப்பு உரிக்க 3 யூனிட் மின்சாரம், (21 ரூபாய்) மட்டுமே செலவாகும்.
 • எனவே, இதனை குடிசை தொழிலாகவும் பயன்படுத்த முடியும்.
 • பெரிய தொழிற்சாலைகளுக்கு 1 மணி நேரத்தில் ஆயிரம் கிலோ கடலை உரிக்கும் இயந்திரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
 • இதனை விற்பனை ரீதியாக தயாரிக்கும் எண்ணமும் உள்ளது. இன்னமும் விலை நிர்ணயிக்கவில்லை என்றார். தொடர்புக்கு: 08870326671, 09894379321.

நன்றி: தினமலர் 

Related Posts

நிலகடலையில் ஊடுபயிர் நிலகடலையில் ஊடுபயிர் இட்டால், மகசூல் அதிகம் ஆவதுடன...
நிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள்... நிலக்கடலையின் மகசூலை குறைக்கக்கூடிய பல்வேறு காரணிக...
நிலக்கடலை, ஆமணக்கு சாகுபடி பயிற்சி... நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 2016 ஆ...
நிலக்கடலை அதிகம் மகசூல் பெறுவது எப்படி?... நிலக்கடலை பயிருக்கு உரக்கலவை கரைசல் தெளித்தல் மற்ற...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *