குறுவை நாற்றங்கால் தரமாக தயாரிப்பது எப்படி

குறுவை நாற்றங்கால் தரமாக தயாரிப்பது எப்படி என வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது. நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் பாஸ்கர், உதவி பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

  • குறுவை நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் விதைப்பு செய்ய ஒரு ஏக்கர் நடவு செய்ய 8 சென்டு நாற்றங்கால் தேவைப்படும்.
  • நீர்ப்பாசனம் வடிகால் வசதியுள்ள நிலமாகவும், நிழல் படாதவாறும் மற்றும் மின்கம்பத்திற்கு அருகில் இல்லாமலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • கடைசி உழவுக்கு முன்பு 400கிலோ தொழு உரத்தை  அடியுரமாக இட்டு நன்றாக பரப்ப வேண்டும். மேலும் 16 கிலோ டிஏபி அல்லது 6.4 கிலோ யூரியா , 48 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை அடியுரமாக இடவேண்டும்.பின்பு 20க்கு2 மீட்டர் (1சென்ட்)அளவில் மேட்டுப்பாத்தி அமைத்து நன்கு சமன் செய்து அதற்கு, இடைவெளி சிறு கால்வாய் அமைக்க வேண்டும்.
  • ஈரான மேட்டு பாத்திகளில் முளை கட்டிய விதைகளை சென்டுக்கு 3கிலோ விதை என்ற அளவில் சீராக தூவி விதைக்க வேண்டும்.
  • (திருந்திய நெல் சாகுபடிக்கு 2 முதல் 5 கிலோ விதை போதுமானது. அதை பாய்நாற்றங்கால் விதைப்பு செய்ய வேண்டும்.  களை நீக்குவதற்கு விதைத்த 18 அல்லது 24 மணி நேரத்தில் நாற்றங்காளில் சிறிதும் தண்ணீர் தேங்காமல் வடித்துவிட வேண்டும். இல்லை எனில் விதைகளின் முளைப்புதிறன் பாதிக்கப் படும்.ஆனால் நாற்றங்காலில் ஈரம் காயாமல் பார்த்துக்கொள்ளவும். விதைத்த 8ம் நாள் 80மிலி பூட்டாகுளோர் அல்லது தயோபேன்கார்ப் களைக்கொல்லிகளை மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும். பின்பு 2,3 நாட்களுக்கு நீரை வடிக்கட்ட கூடாது.
  • வாலிப்பான நாற்றுகளை பெற, நன்றாக செழித்து வளரவில்லை எனில் 4கிலோ யூரியா அல்லது 8 கிலோ அமோனியம் சல்பேட் உரமிடலாம்.
  • களிமண் நிலமாக இருந்தால் நாற்றுகளில் வேர்கள் அறுபடுவதை தடுப்பதற்கு 2 கிலோ ஜிப்சத்தினை நாற்று பறிப்பதற்கு 2, 3 நாட்கள் முன்னதாக இட வேண்டும். 3 முதல் 5 இலைகளுடைய 25 வயது நாற்றுகளை பறித்து நட வேண்டும்.

நன்றி: தினகரன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *