குலைநோய் தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை காப்பது எப்படி?

குலைநோய் மற்றும் இலைஉறை அழுகல் நோய்களின் அறிகுறிகள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் அளித்துள்ள ஆலோசனைகள்:

நெல் குலைநோய் அறிகுறிகள்:

  • இலையின் மேற்பரப்பில் சிறிய செம்மை நிற கண் வடிவப் புள்ளிகள் தோன்றி அவை ஒன்றோடு ஒன்று இணைந்து இலை கருகிவிடும், கதிரின் கழுத்துப் பகுதியில் கருமை நிறை புள்ளிகள் தோன்றுவதால், கதிரிலுள்ள மணிகள் பதராகிவிடும். சில நேரங்களில் கதிர் ஒடிந்து கீழே விழுந்துவிடும்.
  • காற்றின் மூலம் பரவும் பைரிகுலேரியா ஒரைசா என்ற பூசணத்தினால் இந்நோய் ஏற்படுகிறது.
  • இரவு நேர வெப்பநிலை 20 240 செ மற்றும் ஈரப்பதம் 90 சதவீதம், இந்த நோய் பரவ ஏற்றதாக அமைகிறது.

நோய்க்கட்டுப்பாடு:

  • இந்த நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு ட்ரைசைக்ளோ சோல் – 200 கிராம் அல்லது இப்ரோபென் பாஸ் – 200 மிலி அல்லது கார்பெண்டாசிம் – 200 கிராம் திரவத்துடன் கலந்து அடிக்க வேண்டும்.

இலை உறை கருகல் நோய் அறிகுறி:

  • நெற்பயிரின் தண்டுப்பாகத்தில் நீண்ட முட்டை வடிவ செம்மை நிறப்புள்ளிகள் தண்ணீர் மட்டத்திலிருந்து தோன்றி மேல் நோக்கி பரவும்.
  • நோயின் தீவிரம் அதிகமாகும்போது அனைத்து தூர்களும் பாதிக்கப்பட்டு தூர் கருகிவிடும்.
  • தண்ணீர் மூலம் பரவும் ரைசொக்டோனியா சொலானி என்ற பூசணத்தின் மூலம் இந்நோய் ஏற்படுகிறது.
  • பகல் நேர வெப்பநிலை 25 300 செ ஈரப்பதம் 80 சதவீதம் மற்றும் தேங்கும் நீர் ஆகியவை இந்நோய் பரவ ஏற்ற சூழ்நிலைகள் ஆகும்.

நோய்க்கட்டுப்பாடு:

  • இந்த நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு கார்பெண்டாசிம் – 200 கிராம் அல்லது ஹெக்சகோனாசோல் – 200 மிலி அல்லது இப்ரோபென்பாஸ் – 200 கிராம் என பூஞ்சாணக்கொல்லியுடன் திரவத்துடன் சேர்த்து இலைவழியாக செலுத்த வேண்டும்.
  • இதில், ஏதாவது ஒரு மருந்தை இரண்டு தடவை 15 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  • மேலுரமாக யூரியா உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
  • விவசாயிகள் இதனை அறிந்து தகுந்த பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *