திருந்திய நெல் சாகுபடியில் உர மேலாண்மை

திருந்திய நெல் சாகுபடி முறையில் குறைந்த இடுபொருட்களின் மூலம், அதிக மகசூல் பெறலாம்.

  • சாதாரண நெல்நடவில் மொத்த நீர்த்தேவை, 1200 மி.மீ., எனில் திருந்திய சாகுபடியில் பாதியளவு போதும்.
  • இலை வண்ண அட்டையை பயன்படுத்தி, தேவைக்கேற்ப தழைச்சத்து இடவேண்டும்.
  • வெள்ளைப் பொன்னிக்கு 3ம் எண், மற்ற ரகங்களுக்கு 4ம் எண்ணுடன் நிறத்தை ஒப்பிட வேண்டும்.
  • அட்டை எண் 4க்கு குறைவாக இருந்தால், ஒரு எக்டேருக்கு 30 கிலோ அளவில் தழைச்சத்தும், தண்டு உருளும் பருவத்தில் பாதியளவு சாம்பல் சத்தும் இட வேண்டும்.
  • நிலத்தில் சீரான நீர் இருக்கும் போது, நட்ட 10, 20, 30, 40ம் நாட்களில் களைக்கருவி கொண்டு, பயிரின் ஊடே குறுக்கும், நெடுக்குமாக களையை மண்ணில் மடக்கி விட வேண்டும்.
  • காற்றோட்டம் அதிகமாவதுடன், தண்ணீர், உரச்சத்துக்கள் நெற்பயிருக்கு கூடுதலாக கிடைக்கும்

இவ்வாறு  மதுரை நீர் மேலாண்மை பயிற்சி நிலைய, வேளாண் துணை இயக்குனர் (பொறுப்பு) ராமநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *