நெற்பயிரில் இலைக்கருகல் நோய்

நெற்பயிரில் பாக்டீரியா தாக்குதலால் இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்துவது குறித்து குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் அப்பன்ராஜ் விடுத்துள்ள் செய்திக்குறிப்பு:

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் தற்போது சம்பா பயிரிடப்பட்டுள்ள பயிரில் சில இடங்களில் பாக்டீரியா தாக்கி இலைக் கருகல் நோயின் அறிகுறிகள் காணப்படுகின்றன.

நெற்பயிரின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காணப்படுவதால் விவசாயிகள் இதனை மஞ்சள் நோய் என தவறாகக் கருதுகின்றனர்.

அறிகுறிகள்

  • பாக்டீரியா தாக்கிய பயிரில் இலையின் நுனிப் பகுதியிலிருந்து மஞ்சள் நிற பட்டை வடிவ கோடு துவங்கி இலையின் அடி வரை பரவத் தொடங்குகிறது.
  • இது காலை நேரத்தில் இலையில் உள்ள மஞ்சள் நிற திட்டுகளில் பாக்டீரியாவின் திரவம் வடிவதைக் காணலாம்.
  • பாதிக்கப்பட்ட இலைகளை குறுக்கு வாட்டில் வெட்டி ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி அதில் வைத்தால் பாக்டீரியாவிலிருந்து வரும் திரவம் காரணமாக தண்ணீர் கலங்குவதைக் காணலாம்.
  • நோயின் பாதிப்பு அதிகமானால் இலை முழுவதும் காய்ந்து விடும்.
  • தற்போது பனிப்பொழிவு, காற்றில் அதிக ஈரப்பதம் காரணமாக நோய் அதிகம் பரவ வாய்ப்புள்ளதால், தாக்குதல் அறிகுறிகள் தென்பட்ட உடனே மருந்து தெளித்தல் வேண்டும்.

கட்டுப்பாடு

  • ஒரு ஏக்கருக்கு காப்பர் ஆக்சி குளோரைடு 500 கிராம், ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை மருந்து 120 கிராம் கலந்து தெளிக்க வேண்டும், அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 200 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் இயற்கை நோய் விரட்டியான பசுஞ்சாண கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • மேலும் பயிர் நன்கு நோயிலிருந்து விடுபட்ட பின்னரே தழைச் சத்தினை இடவேண்டும்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

நேரடி நெல் விதைப்பில் சேமிப்பு... நேரடி நெல் விதைப்புக் கருவி மூலம் விதைத்தால் ஆரம்ப...
நெற்பயிரில் குலை நோய் அறிகுறிகள்நெற்பயிரின் அனைத்து பகுதிகளும் (இலை...
நெற்பயிரில் இலையழுகல் நோய் தடுப்பு முறைகள்... பிசான பருவத்தில் தற்போது பயிரிடப்பட்டுள்ள நெல் பயி...
பனிப்பொழிவு: சம்பா பயிரை காக்க யோசனைகள்... பனிப்பொழிவில் இருந்து சம்பா பயிரை காக்க கூடுதல்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *