நெற்பயிரில் குருத்துப்பூச்சி கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முக்கூடல் வேளாண்மை உதவி இயக்குநர் செந்தில்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

 • பாப்பாக்குடி வட்டாரத்தில் பிசான பருவ நெல் சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் குருத்துப்பூச்சி தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டு ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
 • இந்த வருடம் குருத்துப்பூச்சி தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாத்துக்கொள்ளும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
 • குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகள் நெற்பயிரின் இலைகளின் நுனியில் குவியல் குவியலாக முட்டைகளிடும்.
 • இம்முட்டைகள் பழுப்பு மற்றும் மஞ்சள் நிற ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இதில் இருந்து வெளிவரும் இளம் மஞ்சள் நிற புழுக்கள் நெற்பயிரின் தூர்களை தாக்கி சேதம் ஏற்படுத்தும்.
 • அப்போது பயிர் குருத்து வாடிவிடும். அந்த குருத்தினை கைகளால் உருவினால் எளிதாக வந்து விடும்.
 • குருத்தின் அடியில் பூச்சியினால் ஏற்பட்ட சேதமும் கதிரின் தண்டினை துண்டித்திருப்பதும் தெரியும்.
 • இந்த அறிகுறி தெரிந்தால் விவசாயிகள் உடனடியாக புரொப்பனோபாஸ் 50 சதம், இன்டோசோகார்ப் 14.50 சதம், கார்டாப் ஹெட்ரோகுளோரைடு 50 சதம் ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • திரவங்களான சாண்டோவிட், பைட்டோவிட், லிங்காவிட் ஆகியவற்றில் ஒன்றினை ஏக்கருக்கு 100 மி.லி வீதம் கலந்து சீராக தெளித்து குருத்துப்பூச்சியினை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தடுக்கலாம்.
 • மேலும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளில் ஒன்றான இனக்கவர்ச்சி பொறிகளை நெல் நடவு செய்த உடன் ஒரு ஏக்கரில் 4 எண்ணம் வீதம் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்து குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

சம்பா பயிரில் இலைகருகல் நோய் வேதாரண்யம் வட்டாரத்தில் சம்பா பயிரில் ஏற்பட்டுள்ள ...
திருந்திய நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யும் முறை... ஒற்றை நாற்று நடவு முறைக்கு நாற்றங்கால் தயார் செய்ய...
நாட்டு விதைகளை காப்பாற்றுவதின் முக்யத்துவம்... பசுமை புரட்சி ஆரம்பித்த இருவது ஆண்டுகளுக்கு முன், ...
நெல் அறுவடைக்கு பின்பு சிறுதானியம் சாகுபடி... தற்போது பெய்துள்ள மழையால் கண்மாய்கள் ஓரளவு பெருகிய...

One thought on “நெற்பயிரில் குருத்துப்பூச்சி கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

 1. வெங்கடேசன். கோ says:

  எனது உரவிற்பனை தொழிலுக்கு பேருதவியாக இருக்கும். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *