நெல் குருத்துப்பூச்சியை கட்டுபடுத்தும் வழிமுறைகள்

நெல் குருத்துப்பூச்சியை வழிமுறைகள் குறித்து கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்:

  • கார்நெல் சாகுபடி செய்துள்ள ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், சிவசைலம் போன்ற பகுதிகளில் நெல் பயிர் கதிர் வரும் தருவாயில் உள்ளது.
  • நெல் பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதல் தற்போது கதிர் வரும் பருவத்தில் உள்ள பயிர்களில் ஒன்று முதல் 2 சதம் வரை பாதிப்பு தென்படுகிறது.
  • நெல் கதிர் பருவத்தில் குருத்துப்பூச்சி தாக்குதல் 2 சத வெண் கதிர்களுக்கு மேல் இருந்தால் பொருளாதார சேத நிலையாகும்.
  • குருத்துப்பூச்சி தாக்கிய பயிரில் நெல் கதிர்கள் வெண்கதிராக மாறும். அதை கையினால் இழுத்தால் கையில் வந்துவிடும். அதில் குருத்துப்பூச்சி கதிரின் தண்டினை துண்டித்திருப்பது தெரியும்.
  • எனவே இக்குருத்துப்பூச்சி தாக்குதல் மேலும் பரவ வாய்ப்புள்ளதால் விவசாயிகள் புரொப்பெனோபாஸ் 50 சதம் ஏக்கருக்கு 400 மிலி, இன்டாசோகார்ப் 14.50 சதம் ஏக்கருக்கு 80 மிலி, கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 சதம் ஏக்கருக்கு 200 கிராம் என்ற மூன்று மருந்தில் ஏதேனும் ஒன்றுடன் ஒட்டும் திரவங்களான சாண்டோவிட் அல்லது பைட்டோவிட் அல்லது லிங்காவிட் ஏதேனும் ஒன்றினை ஏக்கருக்கு 100 மிலி வீதம் கலந்து சீராக தெளிக்கவும்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

சேதாரமின்றி நெல் அவிக்க.. விவசாயத்தில் பாரம்பரியத்தை பின்பற்றினாலும் நவீன தொ...
விதைநெல் முதல் சாதம் வரை! கடந்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை சாப...
என்டோசுல்பான் கர்நாடகத்தில் தடை... ரசாயன பூச்சி கொல்லியான என்டோசுல்பான் பற்றி ஏற்கனவே...

One thought on “நெல் குருத்துப்பூச்சியை கட்டுபடுத்தும் வழிமுறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *