நெல் பயிரில் அந்துப்பூச்சி கட்டுபடுத்துதல் எப்படி

கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்பட்டு ள்ள நெல் பயிரில் அந்துப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.

 • அந்து பூச்சிகள் மஞ்சள் நிறமாக இருக்கும். இலையின் நுனிப்பகுதியில்,மேற்பரப்பில் இளம் மஞ்சள் நிறமுடைய முட்டைகளை குவியல் குவியலாக இட்டு பழுப்பு நிற ரோமங்களால் மூடும்.
 • புழுக்கள் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மெல்லிய நூலிழையில் ஊசலாடுவதை காணலாம்.
 • தாக்கப்பட்ட தண்டுகளில் சிறு துவாரத்தையும், தண்டினுள்ளே புழுவையும் அதன் கழிவையும் காணமுடியும்.
 • நடவு வயலில் இதன் தாக்குலால் நடுக்குருத்து காய்ந்திருக்கும்.

தடுக்கும் முறைகள்

 • வயல்களில் நடுவே விளக்குப்பொறியினை வைத்து, இப்பூச்சியின் வரவை முன்கூட்டி அறியலாம்.
 • இளம்பருவத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 10 சதவீதம் குருத்துக்களுக்கு கீழ் காய்ந்திருந்தால், பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையில்லை.
 • கதிர் வெளிவரும் பருவத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 2 சதவீத வெண்கதிர் இருந்தால் முட்டைக்குவியலை அழிக்கலாம்.
 • சரியான இடைவெளியில் நாற்றுகளை நடவேண்டும்.
 • அறுவடைக்குப் பின் நிலத்தை உழவு செய்ய வேண்டும்.
 • விளக்கு பொறிகளை வைத்து, தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
 • முட்டை, புழு ஒட்டுண்ணிகள் மூலமும் கட்டுப்படுத்தலாம்.
 • ஒரு ஏக்கருக்கு மோனோகுரோட்டாபாஸ் 200 மில்லி அல்லது குயினால்பாஸ் 400 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அந்துப்பூச்சியை கட்டுப்படுத்த விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவசாயத்துறை உதவி இயக்குநர் (பொ) ராமராஜ் கூறியுள்ளார்.

நன்றி:தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

நெல் நாற்றில் வெளிர் தன்மை தற்போது தொடர்ந்து பெய்து வரும் தொடர்மழையால்,  நெற்...
நெல் நாற்றங்காலில் இயற்கை வழி பூச்சி கட்டுப்பாடு... நாற்றங்காலில் நெல் நாற்றுவிடும் சமயத்தில் உருவாகும...
ஒரு ஏக்கரில் 6,130 கிலோ நெல் விளைச்சல் சாதனை!... 'இயற்கை விவசாயம் மூலம் தான், நம் முன்னோர், அதிகளவி...
நெல் அறுவடைக்கு பின்பு சிறுதானியம் சாகுபடி... தற்போது பெய்துள்ள மழையால் கண்மாய்கள் ஓரளவு பெருகிய...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *