நெல் பயிரில் புகையான் பூச்சி கட்டுப்பாடு

நெல் பயிரில் புகையான் பூச்சி தாக்குதலை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் கட்டுப்படுத்தலாம்’ என, வேளாண் உதவி இயக்குனர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

  • பள்ள்ளிபாளையம் வட்டாரத்தில் நெல் பயிர் தற்போது பூக்கும் நிலை முதல் பால் பிடிப்பு நிலை வரை உள்ளது.
  • தற்போது நீர் தேங்கியுள்ள வடிகால் வசதி குறைவான வயல்களில் புகையான் பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது.
  • இப்பூச்சிகள் சாம்பல் நிறமாக தத்துப் பூச்சிகளாக இருக்கும்.
  • இவை நெல் பயிரிடுடன் தூர் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக இருந்து சாற்றினை உறிஞ்சி சேதம் விளைவிக்கும்.
  • சத்து பயிரின் மேலே போகாததால் பயிர் மஞ்சளாக மாறி திட்டு திட்டாக கருகி நெருப்பு வைத்தது போன்றும், உச்சகட்ட சேதம் வட்டமாக தெரியும்.
  • பொதுவாக நெருக்கமாக நடவு செய்து, சூரிய வெளிச்சம் தூரில் படாது, காற்றோட்டம் இல்லாத சூழ்நிலையில் தூர்களில் இப்பூச்சி தாக்கும்.
  • தழைச்சத்து உரங்கள் யூரியா போன்றவை அதிகமாக இட்ட வயல்களை புகையான் பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன.
  • காற்றின் ஈரப்பதம் அதிகம் இருந்தாலும் புகையான் தாக்குதல் அதிகரிக்கும்.
  • ராஜராஜன் 1000 நெல் சாகுபடி வயல்களில் புகையான் தாக்குதல் இருக்காது.
  • புகையான் பூச்சிகள் இருப்பதை தூர்களின் அடியில் கண்காணித்து அழிக்க வேண்டும்.
  • புகையான் பூச்சியைப் பார்த்தவுடன் வயலில் தண்ணீரை உடனே வடித்து விடவேண்டும்.
  • ஆறு அடிக்கு ஒரு பட்டம் விட்டு வயலில் பயிரைப் பிரித்து வைக்க வேண்டும்.
  • தழைச்சத்து உரங்களை தவிர்க்க வேண்டும்.
  • தூர்களின் அடிப்பகுதியில் படும்படி மருந்து தெளிக்க வேண்டும்.
  • புகையானின் மறு உற்பத்தியை உண்டாக்கும் குயின்பாஸ், செயற்கை பைரித்ராய்டு ஆகிய மருந்துகளை தெளிக்கக் கூடாது.
  • ஒரு ஏக்கருக்கு அசிபேட் 75 எஸ்.பி., என்ற மருந்தை 250 கிராம் என்ற அளவில் தெளித்து பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

நன்றி: தினமலர்

Related Posts

நெல் மாற்று நடவு இயந்திரத்தை வாடகைக்கு... டெல்டா விவசாயிகள், நெல் நாற்று நடவு இயந்திரத்தை வா...
நெல் அறுவடைக்கு பின்பு சிறுதானியம் சாகுபடி... தற்போது பெய்துள்ள மழையால் கண்மாய்கள் ஓரளவு பெருகிய...
நெற்பயிரில் புகையான் பூச்சி மேலாண்மை... தற்போதையப் பருவத்தில் புகையான் பூச்சி தாக்குதல் அத...
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்…... நெற்பயிரை நடவு செய்தது முதல் வளர்ந்து கதிர் வருவது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *