பச்சைபாசி படர்வதால் பயிர்களில் வளர்ச்சி குறைபாடு

பச்சைபாசி வயல்களில் பாய்போல் படர்வதால் மண் ணில் காற்றோட்டம் தடைப்பட்டு பயிர்களின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுவதாக வயல் ஆய்வில் தெரிய வந்தது.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி வட்டாரத்தில் சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் அசோகன் மற்றும் உதவி பேராசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் புள்ளம்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மணிவண்ணன் தலைமையில் நெல்வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு பின் அவர்கள் கூறுகையில் –

  • நெல் வயல்களில் பச்சைபாசி பிரச்சினை தென்படுவதால் பாசியால் பாதிக்கப்பட்ட வயல்களில் பாய்போல் படர்ந்து மண்ணில் காற்றோட்டம் தடைப் பட்டு பயிர்களின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகிறது.
  • மேலும் நெற்பயி ருக்கு இடப்படும் மேல் உரம் மண் ணில் படாமல் தடுக்கப்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்த பாசிபடர்ந்த வயல்களில் ஒரு கிலோ காப்பர் சல் பேட்டை 25 கிலோ மணலு டன் கலந்து சீராக தூவ வேண்டும்.
  • காப்பர் சல்பேட் இட்ட பிறகு 3 நாட்களுக்கு வயலில் தண்ணீரை கட்டவோ, வடிக்கவோ கூடாது. 3 நாட்களுக்கு பிறகு நன்றாக நீரை தேக்கி, பின் வடித்து விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் பாசியின் வளர்ச்சி தடைப்பட்டு மண்ணில் காற்றோட்டம் ஏற்படுவதன் மூலம் பயிர் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.
  • இலைசுருட்டுப்புழு, தீவிரதாக்குதலின் போது முழு வயலும் வெண் மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சி அளிக்கும். மேலும் தண்டுதுளைப்பான் தாக்குதலுக்கு உள்ளான குருத்து காய்ந்து விடும். கதிர் விடும் பருவத்தில் தாக்குதல் ஏற்படின் வெண்கதிர்கள் தோன்றும். பிடுங்கினால் கையோடு வந்துவிடும்.
  • இலை சுருட்டு புழு, தண்டுதுளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்த தழைசத்து தரக்கூடிய யூரியாவை, வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஜிப்சத்துடன் கலந்து இடவும். கார்போபியூரான் 3ஜி போரேட் 10ஜி போன்ற குருணை மருந்துகளை தவிர்க்க வேண் டும்.
  • வரப்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • நெல்குலைநோய் பாதிக்கப்பட்ட வயல்களில் கதிர்கள் காய்ந்து, நெல் மணிகள் பால் பிடிக்காமல் வெண் கதிர்களாக மாறிவிடும்.
  • தாக்குதலுக்குட்பட்ட நெல் மணிகள் நிறம் மாறி பதராக மாறிவிடும்.
  • இவற்றை கட்டுப்படுத்த டிரைசைக்ளோசோல் 75டபுள்யுபி 120கிராம் அல்லது காப்பன்டாசிம் 200 கிராம் மருந்தினை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும். பாக்டீரியா இலை கருகல் நோய் விதை, பாசனநீர், மலைசாரல் மூலம் பரவுகிறது. மேலும் நிழல், நெருக்க நடவு, அதிக தழைசத்து, மழை மற்றும் மந்தமான வானிலை இந்நோய் பரவ சாதகமான சூழ்நிலைகள் ஆகும். இந் நோயை கட்டுப்படுத்த 20சதவீத பசுஞ்சாண கரைசலை 10நாட்கள் இடை வெளியில் 3முறை தெளிக்கவும் என்றார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *