மழை பாதித்த நெற்பயிர்கள் வளர வழிமுறை

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வளரச் செய்ய தேவையான வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் நடேசன் யோசனைகள் தெரிவித்துள்ளார்.

  • கடந்த வாரங்களில் தெடர்ந்து பெய்த கனமழையால் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் பத்து நாட்களுக்கு மேலாக மழைநீரில் மூழ்கி இருந்தது.
  • இதனால், நெற்பயிர்களின் வேர்களுக்கு போ திய ஆக்சிஜன் கிடைக்காததா ல் கருமை நிறமாக மாறி, நெற்பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பூமியில் இரு ந்து எடுத்து பிற பாகங்களுக்கு எடுத்துச் செல்ல வேர் திறனின்றி உள்ளது. இதனால், நெற்பயிர்கள் முற்றிலும் அழு கி விடும் நிலையில் உள்ளது.
  • மழைநீர் வடிந்ததும், நடவு ஆட்களைக் கொண்டு நெல் வயலை நன்கு மிதித்து விட வேண்டும்.
  • இதனால், வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைப்பதால், செயலற்று கிடக்கும் வேர்கள், தூண்டிவிட்டு வேர்களின் வளர்ச்சி தூண்டிவிடப்படுவதால் புதிய வேர்கள் தோன்றி நிலத்தில் இருந்து பயிருக்கு தேவையான சத்துக்களை எடுக்கும் திறன் அதிகரிக்கும்.
  • இதனால், பயிர் முற்றிலும் அழிவதில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
  • எனவே, கட்டாயம் தண்ணீர் வடிந்ததும் நடவாட்களைக் கொண்டு நெல் வயலை நன்கு மிதித்துவிட்டு, பின் ஒரு ஏக்கருக்கு தேவையான யூரியா 22 கிலோவுடன் நான்கு கிலோ வேப்பம் புண்ணாக்கை கலந்த பின், 17 கிலோ பொட்டாஷ், 18 கிலோ ஜிப்சம் ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.
  • யூரியாவுடன் வேப்பம்புண்ணாக்கு கலந்து விடுவதால் தழைச்சத்து வீணாவது தடுக்கப்பட்டு, அதிக அளவு தழைச்சத்து பயிருக்கு கிடைக்கச் செய்கிறது.
  • இதனால், பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. பொட்டாஷ் இடுவதால் பயிருக்கு வலிமையும், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை கூடுகிறது.
  • நுண்ணூட்டத்தின் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க ஏக்கருக்கு ஐந்து கிலோ நெல் நுண்ணூட்டத்துடன் 50 கிலோ ஆட்டு எரு கலந்து இடுவதால் பயிர்கள் நுண்ணூட்டங்களை எடுத்துக் கொண்டு செழித்து வளரும்.
  • இந்த உர நிர்வாக முறையை கடைபிடித்தால் மழை நீரில் இருந்து அழுகிய பயிரை ஓரளவு காப்பாற்றி, உற்பத்தியை அதிகாரிக்கலாம்.
  • நெல் நுண்ணூட்டம் 50 சதவீத மானிய விலையில் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் வழங்கப்படுகிறது.

இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்று திருத்துறைப்பூண்டி வேளாண் உதவி இயக்குனர் நடேசன் கேட்டுக் கொண்டார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *