வறட்சியை தாங்கி வளரும் நெல்

மானாவாரி நிலங்களில் வறட்சியை தாங்கி வளரும், ‘அண்ணா-4’ என்ற புதிய ரக நெல்லில் நல்ல மகசூல் கிடைப்பதால், கோவை விவசாயிகள் பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை வேளாண் பல்கலையும், பரமக்குடி வேளாண் ஆராய்ச்சி மையமும் இணைந்து 2009ம் ஆண்டு, ‘அண்ணா-4’ என்ற புதிய மானாவாரி ரக நெல் அறிமுகம் செய்தது. வேளாண் பல்கலை வேளாண் – உயிரியல் தொழில்நுட்ப துறை இயக்குனர் சந்திரபாபு கூறியதாவது:

 • ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மானாவாரி நெல், ஒரு லட்சம் எக்டரில் பயிர் செய்யப்படுகிறது.
 • பெரும்பாலும் நாட்டு நெல் மற்றும் ஆடுதுறை நெல் ரகங்களே சாகுபடி செய்யப்பட்டு வந்தன.
 • இவை குறைந்த விளைச்சலையும், சாய்ந்து வளரும் தன்மையும் உடைய நெல் ரகங்கள். மழை குறைவாக உள்ள காலங்களில், குறைந்த விளைச்சலை மட்டுமே பெறமுடியும்.
 • இப்பிரச்னைக்கு தீர்வு காண, அண்ணா-4 என்ற புதிய ரக நெல் கண்டுபிடிக்கப்பட்டது.
 • இந்த நெல் வறட்சியை தாங்கி வ ளர்வதோடு, நேரடி விதைப்புக்கும் ஏற்றது.
 • 105 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.
 • அண்ணா-4 ரகம் 66 சதவீதம் அறவைத்தி றனும், நீண்ட சன்னமான அரிசியையும் கொண்டது.
 • எக்டருக்கு நான்கு முதல் ஐந்து டன் வரை மகசூல் கிடைக்கும்.
 • வறட்சி அதிகம் உள்ள மாவட்டங்களில், இந்நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்துள்ளது.
 • தற்போது வறட்சி அதிகரித்து இருப்பதால் அண்ணா -4 நெல் ரகத்தை பயிரிட விவசாயிகள் விரும்புகின்றனர். இவ்வாறு, சந்திரபாபு கூறினார்.
 • மேலும், விபரங்களுக்கு 04226611262 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

இரண்டு மகசூல் தரும் ஒட்டடையான்... டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாது, தமிழகத்தில் மடு...
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை... ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளில் ஒன்றான ப...
பாரம்பரியமிக்க காட்டு யானம் நெல் ரகம்... திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய முயற்சியாக, பாரம்ப...
பாரம்பரிய நெல் நடவுத் திருவிழா... பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கும் நமது பாரம்பரிய...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *