விதை நேர்த்தி செய்தால் விளைச்சலை அதிகரிக்கலாம்

சம்பா பருவத்தில் நெல் விதைகளை விதை நேர்த்தி செய்து விதைத்தால், அதிக விளைச்சல் பெறலாம் என மோகனூர் வேளாண் உதவி இயக்குநர் தங்கராஜூ தெரிவித்துள்ளார்.

  • நாற்று நடுவதற்கு முன், ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வீதம் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பூஞ்சாண கொல்லியை கலந்து, விதை நேர்த்தி செய்வதால், விதை மூலம் பரவக்கூடிய நோய்களான குலை நோய், இலைக் கருகல் ஆகியவற்றை தடுக்கலாம்.
  • ஒரு ஏக்கருக்கு தேவையான நெல் விதையுடன், 400 கிராம் அசோஸ்பைரில்லம் (நெல்), பாஸ்போ பாக்டீரியா (400 கிராம்) உயிர் உரத்தை விதையுடன் நன்கு கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
  • அசோஸ்பைரில்லம் காற்றில் இருக்கும் தழைச்சத்தை உறிஞ்சி பயிருக்கு அளிக்கும்.
  • அதே சமயம், பாஸ்போ பாக்டீரியா மண்ணில் கிடைக்காத மணிச்சத்தை கரைத்து நெல் பயிருக்கு வழங்குகிறது.
  • இதனால் உரச்செலவு குறைவதுடன் அதிக விளைச்சலும் கிடைக்கும்.

விரிவாக்க மையத்தில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ள உயிர் உரங்களை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

சம்பா நெல் சாகுபடியில் பூச்சி, நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த பயிற்சி... புதுக் கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியில் ...
உரச்செலவை குறைக்க நெல் சாகுபடியில் பசுந்தாள் உரம்... தமிழ்நாட்டில் ஒருபோக சம்பா நெல் சாகுபடி அதிக பரப்ப...
பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் தூயமல்லி, மிளகி, கருங்குருவை... பசுமை புரட்சி என்ற பெயரில், குறுகிய கால ரகங்களை பய...
நெற்பயிரில் இயற்கை பூச்சி மேலாண்மை... பச்சை தத்துப்பூச்சி: மேலாண்மை:ஐ. ஆர் 50, சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *