வெள்ள எதிர்ப்பு நெல் அறிமுகம்

தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் ஹெக்டேர்கள் சம்பா பருவத்தில் நெல் பயிரிட படுகிறது. இதில், ஒவ்வொரு ஆண்டும், 3-5 லட்சம் ஹெக்டேர்கள் வட கிழக்கு மழையால் நீரில் மூழ்கி போகிறது.

டெல்டா பகுதிகளில் இந்த பிரச்னை அதிகம். வயலில் ஒரு வாரம் அதிகமாக நீர் நின்றால் பயிர்கள் அழுகி போகின்றன.

இந்த குறையை தீர்க்க, தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் புதிதாக ஸ்வர்ணா சப்1 (Swarna Sub1)  என்ற ஒரு நெல் ரகத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த நெல் ரகம் வயலில் 14-17 நாள் வரை நீர் நின்றாலும் அழுகுவது இல்லை. இந்த ரகம் SRI முறை பயிரடவும் ஏற்றது. நீர் முழுவதுமாக முழ்கீனாலும் பிழைக்க கூடியது.

இந்த நெல் ரகத்தை தஞ்சை மாவட்டதில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்த்ரக்கள் உள்ள நீடாமங்கலம் மற்றும் சிக்கல் ஊர்களிலும் சென்ற ஜூலை மாதம் 2011 அறிமுக படுத்த பட்டு விவசாயிகளுக்கு விதைகள் கொடுக்க பட்டு உள்ளன.

மேலும் விவரங்களுக்கு டாக்டர். ராபின், 09442224409 என்ற அலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி: ஹிந்து (ஆங்கிலத்தில்)

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றத்தை தாங்கும்... ""பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றங்களை தாண்டி வ...
நெற்பயிரில் இலைப் புள்ளி நோய்... அறிகுறிகள்நெற்பயிரில் முதலில் இந்நோய் மிகச்சி...
பச்சைபாசி படர்வதால் பயிர்களில் வளர்ச்சி குறைபாடு... பச்சைபாசி வயல்களில் பாய்போல் படர்வதால் மண் ணில் கா...
நெற்பயிரில் ரசாயன உரத்தின் அளவைக் குறைக்க..... நெல் பயிரில் உயிர் உர விதை நேர்த்தி செய்து ரசா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *