பனை வளர்ப்போம்!

நீர்ச்சுரப்பான் நிலங்களில் பனைகளை நட்டு பல தரப்பு பலன்களை பெறலாம். மிதமான தட்ப வெப்ப வெயில், தேவையான நிலத்தடி நீர் உள்ள பகுதிகளில் குறிப்பாக கண்மாய் கரை ஓரங்களில் இவை உயர்ந்து வளரும்.
பனை பலன் தர மூன்று ஆண்டுகள் தேவைப்படும். எத்தகைய பருவ சூழ்நிலையிலும் வறட்சியையும் தாங்கி வறியோருக்கு பனை வாழ்வளிக்கின்றன. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி குறைந்தபட்சம் 70 ஆண்டுகளை கடந்து பலன் கொடுக்கும் அற்புத தெய்வ மரம் பனை என்று சொல்லலாம். குளிர் மேகங்களை சுயமாக ஈர்த்து மழை வரத்துக்கு பெரிதும் பனை உதவுகிறது.

Panai
பனை மரத்தின் பூம்பாளையில் இருந்து இறக்கப்படும் பதநீர் நாவிற்கு இனிமை தருகின்றது. பதநீர் அருந்தினால் உடல் வெப்பம், உள் தாகம் தீரும். பனை நுங்குகளை நறுக்கி பதநீருடன் கலந்து அருந்துவது உடலுக்கு வலு சேர்க்கும்.
இக்கலவையில் கால்சியம், சோடியம், தாது உப்புகள் உள்ளன. பதநீரை பக்குவமாக காய்ச்சி பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, சில்லுக்கருப்பட்டி, பனை வெல்லம், வேம்பார் கருப்பட்டி தயாரிக்கலாம். இவை உடலுக்கு குளிர்ச்சி, புத்துணர்ச்சியை தருகிறது. மேகநோய், ஜன்னி, கபம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை நீக்குகிறது.

பனை வேரில் விளைகின்ற, நார்ச்சத்து மிகுந்த பனங்கிழங்கு நீர்க்கட்டு, மலச்சிக்கல், வயிற்று வலி முதலான பிணிகளை போக்கும். குறும்பனை விதைகளில் இருந்து எடுக்கப்படும் பனை எண்ணெய் (பாமாயில்) சமையலுக்கு உதவுகிறது. பன்னெடும் காலமாக கருமையான வெளித்தோற்றம் கொண்ட பனை மரங்களின் வெளுத்த ஓலைகள் இல்லையெனில் சங்க காலத்தில் எழுத்தாணி கொண்டு இயற்றப்பட்ட அரிய காவிய இலக்கியச் சுவடிகள் இந்த காலத்தில் இல்லாது போயிருக்கும். அந்தப்பழமை காவியங்களை பாழாகாத பனை ஓலைகளின் மூலம் சாதித்த மகிமை பனை மரங்களுக்கே உரித்தாகும்.
வாத நோயை விரட்டும் விசிறி:

பனை ஓலை விசிறியை பயன்படுத்தினால் வாத தோஷம், பித்த ஆதிக்கம், கப ரோகம் அகன்று விடும். பனங்கட்டையில் வைரம் பாய்ந்த மற்றும் சோற்று பனங்கட்டை என இரண்டு வகை உண்டு. வைரம் பாய்ந்த கட்டை ஓட்டு கூரை அமைக்கவும் சோற்றுக்கட்டை குடிசை போடுவதற்கும்பயன்படுத்தப்படுகிறது.

பட்டி தொட்டிகளில் வாழும் பனை மரம் ஏறும் தொழிலாளிகள் பனை மரத்தை தெய்வமாக கருதி வழிபடும் வழக்கமும் தமிழகத்தில் இன்றளவும் கடைப்பிடிக்கப் படுகிறது.

பனை வளர்ப்போம் பண வளம் பெறுவோம்.

நன்றி: தினமலர்

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “பனை வளர்ப்போம்!

  1. R.Ramalingam. says:

    ஏரி கரைகளில் பனை விதைக்க யாருடைய அனுமதி பெற வேண்டும்.

  2. R.Ramalingam. says:

    புழல்ஏரி கரையில்5000 பனை விதைக்க தயாராக உள்ளோம். உதவி தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *