சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி

சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி செய்யும் பரப்பு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்துள்ளது.

  • சர்க்கரை நோய் மற்றும் வயிறு சம்மந்தமான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குனம் உள்ள பப்பாளி பழத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக மகாராஜகடை மற்றும் வரட்டனப்பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் வீரிய ஒட்டுரக பப்பாளி செடிகளை கடந்த, நான்கு ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகின்றனர்.
  • ஒரு விதை, 10 ரூபாயுக்கு வாங்கும் விவசாயிகள், ஒரு ஏக்கரி,ல் ஆயிரம் செடிகளை நட்டு வைத்து வளர்க்கின்றனர்.
  • ஆறு மாதத்திற்கு பிறகு அறுவடைக்கு வரும் பப்பாளி காய்களை மொத்த வியாபாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜூஸ் பாக்டரி மற்றும் சென்னை, கர்நாடகா மாநிலம் பெங்களூரு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
  • பப்பாளி சாகுபடியில் கூலி ஆட்கள் தேவை குறைவாக உள்ளது.
  • மேலும், மற்ற பயிர்களை போலவே பப்பாளியும் சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுவதால் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் உள்ளது.
  • பொதுவாக மாகாராஜகடை மற்றும் வரட்டனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் அனைத்து விவசாயிகளும் கிணற்று பாசனைத்தை மட்டுமே நம்பியுள்ளர்.
  • நெல், கரும்பு,வாழை, மஞ்சள் பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவாதல், குறைந்த அளவே தண்ணீர் வருமானம் கொடுக்கும் பப்பாளி சாகுபடிக் இப்பகுதி விவசாயிகள் மாறியுள்ளனர்.இதனால் பப்பாளி சாகுபடி செய்யப்படும் பரப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளது.
  • இந்த பகுதியில் கடந்த ஆண்டு, 200 ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, 500 ஏக்கராக அதிகரித்துள்ளது.
  • ஒரு கிலே,ா ஐந்து ரூபாய் முதல், ஏழு ரூபாய் வரை மொத்த விற்பனையாளர்கள் தோட்டத்திலே வந்து காய்களை எடுத்து செல்கின்றனர்.
  • இதன் மூலம் வாரத்துக்கு ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. மற்ற பயிர்களை காட்டிலும் பப்பாளி சாகுபடிக்கு செலவு குறைவு என்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைத்து வருகிறது.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *