சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி

பொள்ளாச்சி அருகே இருக்கும்  நெகமம் பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் பெரும்பாலும் விவசாயிகள் மழையை நம்பியே சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். காய்கறிகள், நிலக்கடலை, தென்னை உள்பட பல்வேறு விவசாயம் நடந்து வருகிறது.

சேரிபாளையம், ஆண்டிபாளையம், தேவணாம்பாளையம், கொண்டேகவுண்டன் பாளையம், ஆவலப்பம்பட்டி, சின்னநெகமம் ஆகிய பகுதிகளில் தற்போது விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Courtesy: Dinathanthi
Courtesy: Dinathanthi

 

 

 

 

 

 

 

 

 

 

ஒரு டன் பப்பாளி

நெகமம் பகுதியில் சமீபகாலமாக மழை அளவு குறைந்து வருகிறது. மழை இல்லாததால் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது மானாவாரியில் சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி நடைபெற்று வருகிறது. குட்டை ரக பப்பாளி ஏக்கருக்கு 900 முதல் 1000 நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவைகளில் காய்கள் நன்றாக காய்த்துள்ளன.

இவை அறுவடை செய்யப்பட்டு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகிறோம். வாரந்தோறும் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் நடவு செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்கள் மூலம் ஒரு டன் பப்பாளி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. போதுமான வருமானமும் இதன் மூலம் கிடைக்கிறது.

நன்றி: தினத்தந்தி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *