பப்பாளி சாகுபடி முறைகள்

 • பப்பாளியில் ஆண், பெண் என இருவகை உண்டு. இருபாலினமும் கொண்ட ரகங்களும் உண்டு. கோ.3, கோ.7 போன்ற ரகங்கள் ஆண் பூ மற்றும் பெண் பூவை ஒரே மரத்தில் கொண்டிருக்கும். இது எளிதில் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்கும்.
 • பப்பையின் எனப்படும் பப்பாளி பால் எடுப்பதற்கு கோ.2 கோ.5 மற்றும் கோ.6 ரகங்கள் ஏற்றவை.
 • கோ.2, கோ.5 ரகங்கள் எக்டேருக்கு 200 முதல் 250 டன் மகசூல் தரும்.
 • கோ.3 ரகம் 120 டன் வரை மகசூலும், கோ.7 ரகம் 225 டன் மகசூலும் தரும்.
 • இரண்டு முதல் இரண்டரை ஆண்டு வயதுடைய பப்பாளியை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

விதை அளவு:

 • ஒரு எக்டேருக்கு அரை கிலோ விதை தேவை.
 • இதற்கு 2 கிராம் பவிஸ்டின் மருந்து கொண்டு நேர்த்தி செய்தல் வேண்டும்.
 • தொழுஉரம், மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் 1 செ.மீ. ஆழத்தில் விதைப்பது நல்லது.
 • ஒரு பைக்கு 4 விதைகள் வீதம் ஊன்றி நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி மூலம் நீர் ஊற்ற வேண்டும்.
 • ஒரு பைக்கு 1 கிராம் வீதம் கார்போபியுரான் 3 கிராம் குருணை மருந்து இட்டு நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்.

நடவு:

 • 60 நாள் நாற்றுகளை 1.8 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.
 • ஒரு குழிக்கு தலா 45 செ.மீ. நீளம், அகலம் மற்றும் ஆழம் தேவை.
 • பப்பாளி செடியை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

பப்பாளியில் கள்ளிப்பூச்சி தாக்குதல்... தமிழ்நாட்டில் சில இடங்களில்  பப்பாளி மரங்களில் கள்...
பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்... கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை சுற்றுவட்டார பகுதியில...
பப்பாளி உற்பத்தியில் சாதனை! பப்பாளி சாகுபடியில் இதுவரை ஒரு மரத்தில் 80 க...
அதிக லாபம் தரும் ஒட்டு ரக பப்பாளி... சிவகாசி எம்.புதுப்பட்டி நெடுங்குளம் கிராம விவசாயி ...

2 thoughts on “பப்பாளி சாகுபடி முறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *