பச்சைப்பயர் – புதிய இரகம் கோ-7

தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசில் ஆடுதுறை 3 பச்சைப்பயறு ரகம் மட்டுமே பாநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் வட்டாரங்களில் பயிர் செய்யப்படுகிறது.

  • இந்த ஆண்டு விதைப்பண்ணை அமைக்க கோ-7 பச்சைப்பயறு ரகம் பெறப்பட்டு தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வட்டாரங்களில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த இரகம் ஜூன், ஜூலை சாகுபடிக்கு ஏற்ற இரகம், சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 978 கிலோ வரை மகசூல் தரக்கூடியது.
  • பயிரின் உயரம் 30 முதல் 32 செ.மீ. உள்ளது. ஒரு செடியில் 18 முதல் 25 காய்களும் ஒரு காயில் 10 முதல் 13 மணிகள் உள்ளது.
  • காய்கள் செடியின் மேற்பரப்பில் அமைந்துள்ளதால் வயல் முழுவதும் காய்கள் நிறைந்து காணப்படுகிறது.
  • மணிகள் பளபளப்பாக இளம் பச்சை நிறத்தில் உள்ளது. 1000 மணிகளின் எடை 38 கிராம் உள்ளது.
  • ஆடுதுறை 3 இரகத்தில் ஒரு செடிக்கு 15 முதல் 20 காய்களும், ஒரு காயில் 8 முதல் 10 மணிகள் மட்டுமே இருக்கும்.
  • 1000 மணிகளின் எடை 25கிராம் மட்டுமே இருக்கும். மற்ற இரகங்களை காட்டிலும் கோ-7 பச்சைப்பயறு ரகம் அதிக மகசூல் தரக்கூடியதாக உள்ளது.
  • இந்த இரகம் தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசு மற்றும் இறவையில் ஆடுதுறை 3 இரகத்திற்கு மாற்றாக பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்: க.பாண்டியராஜன், விதைச்சான்று உதவி இயக்குநர், தஞ்சாவூர்.

தகவல் அனுப்பியவர் முருகன், MSSRF, திருவையாறு

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *