உயிரியல் கொல்லிகள் குறித்த இலவசப் பயிற்சி

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், உயிரியல் கொல்லிகள் குறித்த இலவச பயிற்சி வகுப்பு 2013 டிச. 17-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி. வெங்கடேசன்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • தற்போது சாகுபடி செய்யும் பயிர்களில் பூச்சிகள், நோய்கள், தாவர நூற்புழுக்கள் ஆகியவை அதிகமாக தாக்கி, பயிரின் வளர்ச்சி குன்றி மகசூல் இழப்பு ஏற்படுகின்றது.
  • இதைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் ரசாயன பூச்சிக் கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், புதிய வகை பூச்சிகளும், நோய்களும் தோன்றி, பயிருக்கு நன்மை தரக்கூடிய பூச்சிகளை அழிக்கின்றன.
  • இதன்மூலம், சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதோடு உணவில் விஷத்தன்மை ஏற்பட்டு, தீமை செய்யும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் உண்டாக்குகிறது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் நன்மை செய்வதை விட, அதிகளவு தீமை செய்கிறது.
  • எனவே, உயிரியல் கொல்லிகளை பயன்படுத்தி, பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தி பயிர் சாகுபடி செய்வது குறித்த தொழில் நுட்பங்கள் குறித்து, விவசாயிகளுக்கு காணொளி காட்சி மூலம் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பயிற்சி வேளாண் அறிவியல் மையத்தில் 2013 டிச. 17-ம் தேதி காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
  • இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள், ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தை 04328293592, அல்லது பயிர் பாதுகாப்பு தொழில் நுட்ப வல்லுநரை 09787620754 என்ற தொலைபேசி எண்களில் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

நன்றி: தினமணி

Related Posts

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி... கரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல...
இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி... இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சிபயிற்சி நடக்க...
சின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி பயிற்சி... பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ்...
கால்நடைகள் வளர்ப்பு இலவச பயிற்சி... திண்டுக்கல் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *