சின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி பயிற்சி

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் சின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி 2013 அக். 23, 24-களில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருஙகிணைப்பாளர் பி. வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  • பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களான சின்ன வெங்காயம் மற்றும் எலுமிச்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பயிர்களில் பூச்சி, நோய் உள்ளிட்ட பல காரணிகளால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
  • இதைக் கருத்தில் கொண்டு, 2013 அக். 23-ம் தேதி சின்ன வெங்காய சாகுபடி நுட்பங்கள், 30-ம் தேதி எலுமிச்சை சாகுபடி நுட்பங்கள் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது.
  • சிறிய வெங்காயம் மற்றும் எலுமிச்சை பயிர்களின் நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து காணொளிக் காட்சி மற்றும் செயல் விளக்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
  • பயிற்சியில் பங்கு பெற ஆர்வமுள்ள விவசாயிகள் நேரடியாகவோ அல்லது 04328293251, 04328293592, 09790491566 ஆகிய எண்ணிலோ தொடர்பு கொண்டு பெயர்களைப் பதிவு செய்து பயன் பெறலாம்.

நன்றி: தினமணி 

 

Related Posts

பசுந்தீவனம் உற்பத்தி திறன் பெருக்குதல் பயிற்சி... காஞ்சிபுரம் ஏனாத்தூர் உழவர் பயிற்சி மையத்தில் வருக...
மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி... பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மண்புழு உரம் தயாரித்த...
வாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி... வாழை சாகுபடியில் துல்லிய பண்ணையம், பூச்சி மற்றும் ...
இயற்கை வேளாண் பயிற்சி "நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *