மாடித் தோட்டம் அமைக்கப் பயிற்சி

மாடித் தோட்டம் மூலம் நமக்கு நாமே காய்கறிகள் மற்றும் மலர்கள் வளர்க்கலாம். இதற்கு வீட்டின் மொட்டை மாடி இடம் போதுமானது.

மாடித் தோட்டத்தில் சின்னத் தொட்டிகள், மண்பாண்டங்கள், குடங்களின் அடிப்பாகம், பிளாஸ்டிக் தட்டுகள் ஆகியவற்றில் மண் நிரப்பி அதில் நமக்குத் தேவையான கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், தண்டங்கீரை, புதினா, கறிவேப்பிலை, பொரியல், தட்டை, அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கன்னி, முளைக்கீரை, புடலை, பாகல், பீர்க்கன் போன்ற காய்கறிகளையும், செண்டு மல்லி, செம்பருத்தி, ரோஜா, கனகாம்பரம் போன்ற மலர்களையும் வளர்க்கலாம்.

இதனால் சத்தான சுவைமிக்க நஞ்சில்லாத இயற்கை முறையில் அன்றே விளைந்த காய்கறிகளை தினமும் பெறமுடியும்.

நகர்ப்புறங்களில் வீட்டின் மொட்டை மாடிகளில் மாடித் தோட்டம் அமைப்பதற்கு தோட்டக்கலைத் துறையினர் தேவையான விதை மற்றும் தொழில்நுட்ப உதவிகள் செய்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு 09443013999, 09443961971 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி

Related Posts

தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் த...
அவரை, செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச பயிற்சி... நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செடி முர...
மண் பரிசோதனை செய்வது எப்படி? விவசாயிகள் அதிக அளவில் விளைச்சல் கிடைக்க பயிருக்கு...
தென்னையில் மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்தல் செய்வது எப்படி?... விவசாயிகளுக்கு உதவும் வகையில் தொழில்நுட்ப மிஷன் என...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *