வாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

வாழை சாகுபடியில் துல்லிய பண்ணையம், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2013 ஜன.4-ல் நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

  •  வாழை சாகுபடியில் நீர், உரம் மற்றும் தொழிலாளர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளை சமாளித்து கூடுதல் லாபம் பெற துல்லிய பண்ணைய தொழில் நுட்பம் சிறந்த தீர்வாக உள்ளது.
  • சாகுபடி செய்த வாழையில் தண்டுத் துளைப்பான், கிழங்குத் துளைப்பான் மற்றும் அசுவினி பூச்சிகள் வெளிப்புறத்திலும், நுற்புழுக்கள் மண்ணில் இருந்து கொண்டு வோóகளையும் சேதப்படுத்துகின்றன.
  • இவற்றை விவசாயிகளால் வெறும் கண்ணால் பார்க்க முடியாது என்பதால் வருமுன் தடுக்கும் முறைகள், சேதத்தை கண்டறிவது பற்றி விளக்கப்படவுள்ளது.
  •  வாழையில் மட்டை காய்ச்சலை உண்டாக்கும் இலைப்புள்ளி நோய், ரஸ்தாளி வாழை மரத்தை காயவைக்கும் வாடல் நோய், முடிக்கொத்து நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த என்ன விதமான பூச்சிக் கொல்லி, பூஞ்சாணக் கொல்லிகளை பயன்படுத்தலாம் என்பது குறித்தும் விளக்கப்பட உள்ளன. இதில் வாழை விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

தொடர்புக்கு: 09677485513.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *