பருத்தியில் இலை கருகல் நோய்

பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் மழைக்குப்பின் பருத்தியில் பூச்சி நோய் தாக்குதல் பற்றி வயல் ஆய்வு செய்யப்பட்டது.

  • தற்சமயம் பருத்தி பயிர் காய்ப்பருவத்தில் உள்ளது. தண்ணீர் தேங்கிய மற்றும் ஈரம் அதிகமாக உள்ள வயல்களில் நுண்சத்து பற்றாக்குறை காணப்படுகிறது.
  • நுண்சத்து பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகள் சிவப்பு நிறமாகவும், செடிகள் பசுமை தன்மை இழுந்தும் காணப்படும்.
  • இதனைக்கட்டுப்படுத்துவதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் மெக்னீசியம் சல்பேட் மற்றும் 5 கிராம் சிங்சல்பேட் நுண்ணூட்ட உரத்தினை கலந்து தெளிக்க வேண்டும்.
  • தற்பொழுது காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் நுண்கிருமிகள் அதிகமாக உற்பத்தியாகி செடியில் நோயினை உண்டுபண்ணும்.
  • தற்சமயம் பருத்தி செடியில் பாக்டீரியல் இலைக்கருகல் நோய் பரவலாக காணப்படுகிறது. இந்நோய் செடியின் இலைப்பகுதி, நரம்புபகுதி மற்றும் காய் என அனைத்து பகுதியிலும் காணப்படும்.
  • இந்நோயினால் தாக்கப்பட்ட இலைகளின் அடிப்பாகத்தில் பனித் திவலைகள் சூழ ஒழுங்கற்ற வடிவத்தில் கரும்புள்ளிகள் காணப்படும்.
  • இந்த புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை மஞ்சள் நிறமாகி காய்ந்துவிடும்.
  • இந்த நோயினை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஒரு கிலோவுடன் பாக்டீரிமைசின் 80 கிராமினை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு பெரம்பலூர் வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார்  தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்

Related Posts

பருத்தி செடியின் தண்டுகள இருந்து மக்கிய உரம்... பருத்தி அறுவடை முடிந்ததும் அதன் தண்டுகள் விறகிற்கா...
பருத்தி பிளஸ் பருத்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச...
பருத்தியில் பூச்சி கட்டுப்பாடு... பருத்திப் பயிரில் பூச்சிகள் தாக்குதலைக் கட்ட...
பருத்தி இயற்கை பூச்சி விரட்டி அக்னி அஸ்திரம்... பருத்தி பயிரை போல் எந்த ஒரு பயிரையும் பூச்சிகள் தா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *