பருத்தியில் நுண்ணூட்ட சத்துக்கள

விவசாயிகள், பருத்தியில் அடியுரமாக நுண்ணூட்ட சத்துக்களின் முக்கியத்துவம் அறிந்து இட வேண்டும் என்றார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) கதிரவன்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 • மானாவாரி பீ.டி பருத்தி சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 • ஒருசில பகுதிகளில் அடியுரம் இட்டும்,சட்டிக் கலவை உழவுடன் அடியுரம்இடாமலும் பருத்தி சாகுபடி செய்ய நிலங்கள் தயார் நிலையில் உள்ளன.
 • இந்த சூழ்நிலையில் பருத்தி சாகுபடிக்கு அடியுரமாக நுண்ணூட்டச் சத்துக்கள் இடுவது மிகவும் அவசியமாகும்.
 • நுண்ணூட்டச் சத்துக்கள் என்பவை துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு, போரான், மெக்னீசியம், மாலிப்டினம், கால்சியம் மற்றும் சல்பர் ஆகியவை அடங்கும்.
 • இவை பருத்தியின் சீரான வளர்ச்சிக்கு மிக குறைந்த அளவே தேவைப்படுகின்றன. ஆனால், பேரூட்ட சத்துக்களான யூரியா, பாஸ்பரஸ், பொட்டாஷ் ஆகியவற்றை மட்டுமே அதிகளவில் இட்டு மண்ணில் நுண்ணூட்டச் சத்துக்கள் இல்லாத தன்மையை உருவாக்கப்படுகிறது.
 •  இதனால், பருத்தி செடியில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகளான மெக்னீசியம் சத்து, போரான் சத்து குறைபாடு ஏற்பட்டு மகசூல் குறைகிறது.
 • மேலும் சிகப்பு இலை நோய், சப்பைக் கொட்டுதல், செடி சரியான வளர்ச்சியற்ற தன்மை உள்ளிட்டவை நுண்ணூட்டச் சத்து குறைபாட்டினால் மட்டுமே ஏற்படுகின்றன.
 • இவற்றை நீக்க, பருத்தி விதை நடவு செய்வதற்கு முன் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ என்றளவில், பருத்திக்கான நுண்ணூட்டக் கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து விதை நடவுக்கு முன்னதாக வயலில் சீராக தூவி விட வேண்டும்.
 • அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பருத்தி நுண்ணூட்டக் கலவையை, ஒரு ஏக்கருக்கு 3 கிலோ என்ற அளவில் 30 கிலோ மட்கிய தொழு எருவுடன் கலந்து, 30 நாள்களுக்கு கோணிப்பைக்குள் வைத்து ஊட்டமேற்றிய பின், வயலில் விதை நடவுக்கு முன் சீராக தூவ வேண்டும்.
 • மேலும், நுண்ணூட்டச் சத்துக்களை பேரூட்டச் சத்துக்களான யூரியா, பொட்டாஷ் ஆகியவற்றுடன் கலந்து இடக்கூடாது.
 • நுண்ணூட்டச் சத்துக்கள், பருத்தி செடியின் சீரான வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமின்றி பேரூட்டச் சத்துக்களை பயிர் எடுத்துக்கொள்ள உதவும் பணியை செய்கின்றன.
 • எனவே, பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் அடியுரமாக நுண்ணூட்டச் சத்துக் கலவையை இட்டு பயன்பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தை நேரில் அல்லது முதுநிலை ஆராய்ச்சியாளர் பி.சரவணனை 09944244582 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்

நன்றி: தினமணி

Related Posts

மானாவாரி பருத்தி பயிரிட மண் பரிசோதனை அவசியம்... மானாவாரி பருத்தி சாகுபடி செய்வதற்கு மண் பரிசோதனை அ...
பருத்தி, மக்காச்சோளத்தில் கூடுதல் லாபம் பெற டிப்ஸ்... பருத்தி, மக்காச்சோளத்தில் அதிக லாபம் பெற விவசாயிகள...
பருத்தியில் தண்டுக்கடன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி... பருத்தியில் தண்டுக்கடன் வண்டு தாக்குதலை கட்டுப்படு...
பருத்தி பயிரில் சட்டிக் கலப்பை உழவு அவசியம்!... பருத்தி பயிரில் சட்டிக் கலப்பை மூலம் உழவு செ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *